science

img

அறிவியல் கதிர் - இரா.இரமணன்

 1  காடுகளின்  பன்முக நன்மைகள் 

நில நடுக்கோட்டுக் காடுகள் பூமியின் வெப்பத்தை 1 டிகிரிக்கும் அதிகமாக குளிர்விக்க உதவுகின்றன என ஒரு ஆய்வு கூறுகிறது.இதற்கு முக்கிய காரணம் காடுகள் காற்று மண்டலத்திலுள்ள கார்பனை கிரகித்து சேமிப்பதுவே.ஆனால் குளிர்விப்பதில் மூன்றில் ஒரு பங்கு, நீராவித் துளிகள் மற்றும் ஏரோ சால் வெளிவிடுவது போன்ற சில நிகழ்வுகளாலும் நடைபெறுகிறதாம். கார்பன் டை ஆக்சைடு மற்ற பசுமைக் குடில் வாயுக்கள் குறித்து மட்டுமே நாம் கவனம் செலுத்துகிறோம்.காடுகள் கார்பனை உறிஞ்சும் ரப்பர்கள் மட்டுமே அல்ல.’ என்கிறார்  விர்ஜினீயா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுற்று சூழல் அறிவியலாளர் டெபோர் லாரென்ஸ். காடுகள் தங்களுடய இயற்பியல் மற்றும் வேதியியல் நிகழ்வுகளால் அப்பகுதி தட்ப வெப்ப நிலைகளை பாதிக்கின்றன எனபது எற்கனவே அறியப்பட்ட ஒன்றுதான். இலைகளிலுள்ள துளைகள் மூலம் நீராவியை வெளியேற்றி தங்களையும் சுற்றுப்புறத்தையும் குளிர்விக்கின்றன. மேலும்  காடுகளின் சமச் சீரற்ற மேல்பகுதி அவைகளின் மேல் கடந்து செல்லும் சூடான  காற்றை மேல் நோக்கி தள்ளுவதன் மூலம் குளிர்ச்சியை உண்டாக்குகின்றன.அதோடு ஏரோ சால் எனப்படும் நீர்த்திவலைகளை உண்டாக்கி சூரிய ஒளியை பிரதிபலித்தும் மேகங்களை கருவாக்கியும் வெப்பத்தை குறைக்கின்றன. ஆனால் இதுவரை இவை உலகளாவிய அளவில் எவ்வாறு பாதிக்கின்றன என்பது ஆராயப்படவில்லை. காடுகள் அழிக்கப்பட்டால் மொத்தமாக அவை சேமித்திருக்கும்  கார்பன் வெளியிடப்பட்டு வெப்பம் எவ்வளவு அதிகமாகும் என்கிற புள்ளிவிவரத்தோடு நீராவி வெளியிடுதல்,சமச்சீரற்ற மேற்பரப்பு,ஏரோசால் நிகழ்வுகளால் குறைக்கப்படும் வெப்பம் ஆகியவற்றோடு ஒப்பிட்டு இதன் உலகளாவிய தாக்கத்தை இந்த ஆய்வில் மதிப்பிட்டிருக்கிறார்கள். நிலநடுக்கோட்டிற்கு 50 டிகிரி வடக்கிலும் தெற்கிலும் உள்ள காடுகள் பிரதானமாக கார்பன் சேமிப்பு மூலமே புவி வெப்பமாதலில் பங்கு வகிக்கின்றன. இந்தப் பகுதிகளில்  மற்ற நிகழ்வுகளும் கணிசமான அளவு பாதிக்கின்றன.30டிகிரி வடக்கிலும் தெற்கிலும் உள்ள காடுகளில் கார்பன் சேமிப்பும் மற்ற நிகழ்வுகளும் சரிபாதி பங்கு செலுத்துகின்றன.நிலநடுக்கோட்டிற்கு 10டிகிரி அருகில் உள்ள காடுகளில் நீராவி வெளியிடுதல், சமச்சீரற்ற மேற்பரப்பு,ஏரோசால் நிகழ்வுகளாலேயே பெரும்பகுதி வெப்பம்  குறைக்கப்படுகின்றது என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது

2  தெளிவான  சூரிய பிம்பம் 

ஐரோப்பிய விண்வெளிக் கழகமும் நாசாவும் இணைந்து அனுப்பிய சோலார் ஆர்பிட்டர் விண்கலம், சூரியனின் விரிவான பிம்பங்களை படம் பிடித்துள்ளது.சூரியனின் முழு வட்டம் மற்றும் அதன் வெளி மண்டலமான கொரானா ஆகியவற்றின் அதிக பட்ச தெளிவான படம் இது என்கிறது நாசாவின் பதிவு. 2 மணி மற்றும் 8 மணி நிலைகளில் சூரியனின் மேற்பரப்பிலிருந்து கருப்பு இழைகள் நீண்டு கொண்டிருப்பதைக் காண முடிகிறது என்று அது மேலும் கூறுகிறது.

3 மன நலன் பயிலரங்கம் 

பெங்களூரிலுள்ள அறிவியல் அருங்காட்சியகம் ‘சைக்கி’ எனும் தலைப்பில் 45 நாட்கள் கண்காட்சி ஒன்றை ஏப்ரல் 1 முதல்  நடத்த உள்ளது. சமூக அரசியல் மற்றும் பண்பாட்டு சூழலில் மனித மனம் செயல்படும் சிக்கல்களை ஆராயும் நோக்கம் கொண்டது. 10 புகைப்படங்கள்,6 திரைப்படங்கள் மற்றும் 40 நிகழ்வுகள் நடக்க உள்ளனவாம். தேசிய மன நலம் &நரம்பு அறிவியல் கழகத்தின் துணையோடு இந்தப் பயிலரங்கம் நடைபெர உள்ளது.     

4 சமூக அமைப்பும் மொழியும் 

நாம்  இன்று பேசும் பலவிதமான மொழிகளுக்கு நமது மூதாதையரான உராங் உடாங் போன்ற மனிதக் குரங்குகளுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம் என்கிறது ஒரு ஆய்வு. ஒரு வட்டார சமூக அமைப்பு, அம்மக்கள் பேசும் முறையை வடிவமைப்பது போல மனிதக் குரங்குகளின்  சமூக வாழ்க்கை அவைகள் தங்களுக்குள் உரையாடுவதை நிர்ணயிக்கிறதாம். மொழிகள் பரிணமிப்பதற்கு அடிப்படையான தகவல் ஒலிகளை  மனிதக்குரங்குகள் மற்றும் மனிதர்களின் மூதாதையர்கள் தங்களுக்கிடையே ஏற்படுத்துவதை சமூக சக்திகள் தொடங்கின என்கிறார். இங்கிலாந்து நாட்டிலுள்ள வார்விக் பல்கலைக்கழக பேராசிரியர்   அட்ரியானோ லமீரா.உராங் உடாங் குரங்குகள் தங்கள் மீது ஏற்படப்போகும் தாக்குதல் குறித்து எச்சரிப்பதற்கு உதட்டை மடித்து  மூச்சை உள்ளுக்கு இழுத்து ஒருவகையான ஒலியை எழுப்புகின்றனவாம். போர்னியோ மற்றும் சுமத்திரா  தீவுகளில் வாழும் ஆறு குரங்குக் கூட்டங்களில் 76 உராங் உடாங் குரங்குகளின் இத்தகைய ஒலியை பதிவு செய்து ஆய்வு செய்தனர்.ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து  அவை எழுப்பும் ஒலிகளை கவனித்ததில் மக்கள் கூட்டம் நெருக்கமாக இருந்த பகுதிகளில் ஒலிகளை பல்வேறு விதமாக மாற்றி எழுப்புகின்றன என்பது தெரிய வந்துள்ளது. ஏனெனில் அங்கு அடிக்கடி சமூக ஊடாட்டங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. மக்கள் கூட்டம் பரந்து இருக்கும் இடங்களில் ஒலி மாற்றங்கள் குறைவாகவே நிகழ்ந்துள்ளன. 

5 அடர்த்தியும் அழுத்தமும்  

மிக அதிகமாக அழுத்திவைக்க கூடிய ஒளி துகள் வாயுவை ஜெர்மன் அறிவிய லாளர்கள் உண்டாக்கியுள்ளனர். ஃபோட்டான் எனப்படும் ஒளிதுகள்களை கண்ணாடியால் ஆன சிறிய பெட்டியில் வைத்து அதன் அடர்த்தியை அதிகரித்தனர். இதனால் அது குறைவாக அழுத்திவைக்கப்படும் நிலை உண்டாகும்.ஆனால் ஒரு குறிப்பிட்ட அடர்த்தி நிலையை அடைந்தவுடன் அந்த வாயு எளிதாக அழுத்தி வைக்கப்படும் நிலைக்கு செல்வதை கண்டனர். 

6 மலிவு விலையில் கிருமி தடுப்பு  

டெல்லி ஐ ஐ டியில் உள்ள தொடக்க நிலை நிறுவன மான ஃபேபியோஸிஸ் பேக்டிரீயாக்களையும் வைரஸ்களையும் 30 நிமிட த்தில்  அழிக்கும் துணி ஒன்றை  வடிவமைத்துள்ளார்கள். இது 99.9% கிருமிகளை அழிக்குமாம்.ஹை பேட் எனும் தொழில் நுணுக்கத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இது மிகுந்த சிக்கனமானது என்கிறது அந்நிறுவனம். இதன் மலிவான விலைக்குக் காரணம்  குறைவான தொழிலாளர் ஊதியம் அல்ல;மாறாக அதன் பின்னாலுள்ள தொழில் நுட்பமெ என்கிறார்  அதன் நிறுவனர்.  



 

;