ஓஸ்லோ, அக். 6- ஈரான் நாட்டை சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அமைதிக் கான நோபல் பரிசு அறி விக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான நோபல் பரிசுகள் அக்.2 முதல் அறிவிக்கப்பட்டு வரு கின்றன. ஏற்கனவே மருத்து வம், இயற்பியல், வேதி யியல், இலக்கியம் ஆகிய பிரிவுகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலை யில், அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஈரான் நாட்டின் நர்கீஸ் முகமதி தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். ஈரான் நாட்டுப் பெண் களின் உரிமைக்காக குரல் கொடுத்து வருவதற்காக வும், மரண தண்டனைகளை எதிர்த்து மனித உரிமைகள், சுதந்திரத்துக்காக போராடி வருவதற்காகவும் மனித உரிமைகள் பாதுகாப்போர் அமைப்பின் Defenders of Human Rights Center (DHRC) துணைத் தலைவ ராக இருக்கும் நர்கீஸ் முக மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது.