science

img

விக்ரம் லேண்டரை கண்டறிய முடியவில்லை - நாசா

விக்ரம் லேண்டரை கண்டறிய முடியவில்லை என்று நாசா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண்கலத்தை நிலவில் ஆய்வு செய்ய அனுப்பியது. அத்திட்டம் வெற்றி பெற்றதையடுத்து நிலவில் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டது.

இதைத்தொடர்ந்து 978 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சந்திராயன் 2 செயற்கைக்கோள் ஜூலை 22ம்தேதிஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து  பி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 7-ந் தேதி திட்டமிட்டபடி சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவின் தென்துருவப்பகுதியில் மெல்ல மெல்ல தரை இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தரை இறங்க வேண்டிய இடத்தில் இருந்து 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது, விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

அதைத்தொடர்ந்து விக்ரம் லேண்டர், அதன் 4 கால்களில் நிற்காமல், ஒரே துண்டாக விழுந்து சாய்ந்து கிடந்தது தெரிய வந்தது. அதை சந்திரயான்-2 ஆர்பிட்டர் எடுத்து அனுப்பிய படங்கள் உறுதி செய்தன.
 

;