சென்னை, அக்.6 விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ககன்யான் திட்டத்திற்கு தேவைப்படும் அதிநவீன உயர்தொழில் நுட்ப கட்டமைப்பை (விண்வெளி வீர்ர்கள் பாதுகாப்பாக பூமிக்கு திருப்ப பயன்படும் சாதனம்) சென்னையை சேர்ந்த நிறுவனம் இஸ்ரோவிடம் சனிக்கிழமை (அக்,7) வழங்குகிறது. சென்னை, திருவொற்றியூரில் அமைந்துள்ள கே.சி.பி. நிறுவனத்தின் கனகர பொறியியல் தொழிற்சாலையில் இது வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.பி. குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் இந்திரா தத் கூறினார்.
இந்தக் கட்டமைப்பை, இஸ்ரோவின் மனித விண்வெளி விமான மையத்தின் செயல் இயக்குனர் ஆர். ஹட்டனிடம் கேபிசி அதிகாரிகள் வழங்க உள்ளனர். இஸ்ரோ தற்போது மனித விண்வெளி பயண முயற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இந்த ககன்யான் விண்கல வடிவமைப்பில், ஒரு முக்கிய அங்கம் இன்டகிரேடட் ஏர் ட்ராப் டெஸ்ட் யில் - க்ரூ மாடல் அதாவது விண்வெளி ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு விண்வெளி வீர்ர்களுடன் கூடிய விண்கலம் பூமிக்கு திரும்பும் போது புவியிர்ப்பு விசையால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் கடலில் விழுந்து மிதக்கும். இந்த சாதனத்தின் உட்கட்ட மைப்பை உருவாக்கும் பணியை இரண்டு நிறுவனங்களுக்கு இஸ்ரோ அளித்துள்ளது. அதில் ஒருநிறுவனம் கேசிபி. இந்தக் கட்டமைப்பு, சுமார் 3.1 மீ. அகலம் x 2.6 மீ. உயரம் கொண்ட அலுமினி யம் மற்றும் ஸ்டீல் ஆகியவற்றால் ஆனது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முன்பு இந்த சாதனத்தை ஹெலிகாப்டர் மூலம் வானில் இருந்து கடலில் வீசி இஸ்ரோ பலமுறை சோதித்து பார்க்க உள்ளது என்று கேசிபி தலைவர் நாராயண ராவ் கூறினார். இஸ்ரோவிற்கு பல சாதனங்களை தயாரித்து தரும் கேசிபி நிறுவனம் 1990 ஆம் ஆண்டு முதல் வியட்நாமில் சர்க்கரை ஆலையை நடத்திவருகிறது. இந்தியாவில் இந் நிறுவனம் பொறியியல் சிமெண்ட்.தொழிலிலும் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனமாகும். தென்னிந்தியாவுக்கான வியட்நாம் தூதராக கேசிபி நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் கவிதா தத் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.