science

img

நிலவில் சோடியம் சந்திரயான் தகவல்

பெங்களூரு, அக். 9 - இந்தியாவின் சந்திரயான் -2 விண்கலம், முதல் முறையாக நிலவில் உள்ள சோடியத்தின் அளவை கிளாஸ் எக்ஸ்ரே ஸ்பெக்ட் ரோ மீட்டர் மூலம் வரைபடமாக்கி உள்ளது. பெங்களூரு வில் உள்ள இஸ்ரோவின் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் கிளாஸ் ஸ்பெக்ட்ரோ மீட்டர் வடி வமைக்கப்பட்டது. நிலவில் அதிகள வில் சோடியம் இருப்பதை உறுதிப் படுத்தி, படம் பிடித்து அனுப்பி இருக்கிறது. சந்திரயான் -2 ன் இந்த புதிய கண்டுபிடிப்பு, நிலவின் மேற்பரப்பு மற்றும் அதன் தொடர்பு குறித்த ஆய்வுகளை மேலும் விரிவுபடுத்த உதவும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.