science

img

பிஎஸ்எல்வி சி-46 இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது!

பிஎஸ்எல்வி-சி46 ராக்கெட் இன்று காலை 5.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. 

இந்த ராக்கெட், ரிசாட்-2பி செயற்கைக்கோளை கொண்டு செல்கிறது. இது 615 கிலோ எடை கொண்டது. இந்த ரிசாட்-2பி செயற்கைக்கோள் பூமியை ரேடார் படங்களின் மூலம் ஆய்வு மேற்கொள்வதை விரிவாக்கம் செய்யும். இது ராணுவ பயன்பாடு மற்றும் வானிலை தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ளவும் பயன்படும். 

பிஎஸ்எல்வி-சி46 ஏவப்பட்ட 15 நிமிடங்களில், 4 படிநிலைகள் கொண்ட இந்த ராக்கெட், 555 கி.மீ சுற்றுவட்டப் பாதையில் 37 டிகிரி சாய்வில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது.

மேலும், ரிசாட் வரிசையிலான செயற்கைக்கோளை 8 ஆண்டுகளுக்கு பிறகு, இஸ்ரோ கையில் எடுத்துள்ளது. அதேபோல், இது பிஎஸ்எல்வி வரிசையில் செலுத்தப்பட்ட 48-வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் இஸ்ரோ மூன்றாவது முறையாக ராக்கெட்டை அனுப்பியுள்ளது.


;