science

img

சந்திரயான்-2 விண்கலம் இன்று விண்ணில் பாய்கிறது

ஸ்ரீரிஹரிகோட்டா, ஜூலை 21- இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண்கலத்தை நிலவில் ஆய்வு செய்ய அனுப்பியது. அத்திட்டம் வெற்றி பெற்றதையடுத்து நிலவின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டது.  அனைத்து பணிகளும் முடிவடைந்து ஜூலை 15-ம் தேதி அதிகாலை சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,  அன்று அதிகாலை பி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில்  எரிபொருள் நிரப்பப்பட்டபோது, தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சந்திரயான்-2 ஏவப்படுவது நிறுத்தப்பட்டது. தற்போது அந்தக் கோளாறு சரி செய்யப்பட்டதால் ஜூலை 22 (திங்கள்) மதியம் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

;