science

img

கப்பலில் இருந்து விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை செலுத்திய சீனா

சீனா முதன் முறையாக நடுக்கடலில் கப்பலில் இருந்து ராக்கெட் மூலம் 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது.

சீனாவின் ஷாண்டோக் மாகாணத்தில் உள்ள மஞ்சள் கடலில், நீர்மூழ்கிக் கப்பல் (large semi-submersible barge) ஒன்றில் இருந்து ராக்கெட்டை விண்வெளியில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் மூலம் தொலைத் தொடர்புக்கு 2 செயற்கைக் கோள்கள் மற்றும் கடல் மேல் பரப்பில் காற்றின் வேகம் மற்றும் சூறாவளியை முன்கூட்டியே கணிக்கும் செயற்கைக்கோள் உள்ளிட்ட 7 செயற்கைக்கோள்களை சீனா விண்ணில் நிலை நிறுத்தி உள்ளது. 

;