science

img

சந்திரயான் 2 அனுப்பிய நிலவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது இஸ்ரோ!

சந்திரயான் 2 அனுப்பிய நிலவின் புகைப்படத்தை, இஸ்ரோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இஸ்ரோ நிறுவனம், கடந்த ஜூலை 22-ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் ஏவியது. இதை அடுத்து விண்கலத்தின் சுற்றுப்பாதையை படிப்படியாக 5 முறை மாற்றப்பட்டு பூமிக்கும் விண்கலத்துக்குமான தூரம் அதிகரிக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி சந்திரயான் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விலகியது. இதை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சந்திரயான் 2 நுழைந்தது. மேலும், வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவில் தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்தது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி, 4375கி.மீ தொலைவில் இருந்து நிலவின் புகைப்படத்தை எடுத்து, சந்திரயான் 2 பூமிக்கு அனுப்பி உள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

;