science

img

சந்திரயான் 2 மூன்றாம் படிநிலைக்கு உயர்த்தப்பட்டது

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று வெற்றிகரமாக மூன்றாம் படிநிலைக்கு உயர்த்தப்பட்டது.

கடந்த 22-ஆம் தேதி சந்திராயன் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் விண்கலத்தை ராக்கெட் குறிப்பிட்ட இலக்கில் கொண்டு போய் சேர்த்தது. அப்போது ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் பூமிக்கு அருகே குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,475 கி.மீ. தொலைவிலும் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றி வந்தது.

பின்னர், கடந்த 24-ஆம் தேதி பிற்பகல் 2.52 மணிக்கு சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுப்பாதை முதன்முதலாக உயர்த்தப்பட்டது. அதாவது பூமிக்கு அருகே குறைந்தபட்சமாக 230 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,163 கி.மீ. தொலைவிலும் பூமியை சுற்றி வரும் வகையில் விண்கலத்தின் சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது.

சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுப்பாதை கடந்த 26-ம் தேதி இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டது. தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்தபடி நேற்று அதிகாலை 1.08 மணிக்கு, சந்திரயான்-2 விண்கலத்தில் 71792 உள்ள மோட்டாரை விஞ்ஞானிகள் 16 நிமிடம் இயக்கினார்கள்.

இதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் 3.12 மணிக்கு சுற்றுப்பாதையின் குறைந்தபட்ச உயரம் 271 கி.மீ ஆகவும் அதிகபட்ச உயரம் 71,792 கி.மீ ஆகவும் அதிகரித்து, மூன்றாம் படிநிலைக்கு உயர்த்தப்பட்டது. 
 

;