science

img

தொழில்நுட்ப கோளாறு - சந்திரயான் 2 திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சந்திரயான் 2 திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 

நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய சந்திரயான் 2 செயற்கைக்கோளை இஸ்ரோ நிறுவனம் உருவாக்கியது. 978 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. இதற்கான கவுண்ட்டவுன் நேற்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது. 

இந்நிலையில் விண்ணில் ஏவப்பட 56 நிமிடங்கள் இருந்த போது, சந்திரயான் 2 திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர். விண்கலம் ஏவும் லான்ச்பேட் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சந்திரயான் 2, மறுபடியும் ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர். இதை அடுத்து, சந்திரயான் 2 கவுண்ட்டவுன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும் புதிய கவுண்ட்டவுன் விரைவில் அறிவிக்கப்படும் என்று இஸ்ரோ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

;