science

img

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்

மத்திய அரசு தகவல்

புதுதில்லி,நவ.29-  தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கான திட்டவரைவு தயாரிக்கப்படுவ தாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அணுசக்தித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியதாவது: குலசேகர பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அரசு முன்மொழிந்துள்ளது. அதற்கான திட்டவரைவு தயாரிக்கப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இரண்டு ஏவுதளங்கள் உள்ளன.

இங்கு ஜிஎஸ்எல்வி மற்றும் பிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கள் ஏவப்பட்டு வருகின்றன. தற்போது மூன்றாவதாக புதிய ஏவுதளம் அமைப்பதற்கு உகந்த இடமாக, தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டா போன்றே குலசேகரபட்டினத்திலும் இரண்டு ஏவுதளங்கள் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.