தில்லியை விட சென்னையில் வெப்பம் அதிகமா?
இந்த ஆண்டு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் கடற்கரையோர சென்னை பகுதியில் தில்லியைவிட அதிக வெப்பம் இருப்பதாக உண ரப்பட்டது. ஆனால் உண்மையில் தில்லியில்தான் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. இதற்குக் காரணம் என்னவென்றால் வெப்பத்தை வெப்ப அளவை மட்டும் வைத்து கணக்கிடக்கூடாது. அதனுடன் காற்றி லுள்ள ஈரப்பதத்தையும் சேர்த்து பார்க்க வேண்டும். நம் உடலிலி ருந்து வெளியாகும் வியர்வை, காற்றில் உறிஞ்சப்பட்டால் நாம் சற்று குளிர்ச்சியை உணர்வோம். அதற்கு காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்க வேண்டும். ஆனால் சென்னை கடற்கரைப் பகுதிகளில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. எனவே தில்லியைவிட குறைவான வெப்ப அளவு இருந்தபோதிலும் சென்னைவாசிகள் அதிக வெப்பமாக உணர்கி றார்கள். பல நாடுகளில் வெப்ப அளவை மட்டும் குறிக்காமல் அதனுடன் ஈரப்பதத்தையும் சேர்த்து ‘வெப்பக் குறியீடு’ (heat index) என்பதை பதி விடுகிறார்கள். இந்த ஆண்டு இந்தியாவில் ஈரப்பதம் அதிகம் இருப்ப தற்கு சில காரணங்களை குறிப்பிடுகிறார்கள். கோடைகால தொடக்கத் தில் அரபிக்கடலில் நிலவிய நிலைமைகள், தீபகற்ப பகுதியின் மேல் ஈரப்பதம் மிகுந்த காற்றை கொண்டுவந்தது. இதனால் வெப்பம் குறைந்தது; ஆனால் ஈரப்பதம் அதிகமாகியது. வங்காள விரிகுடாக் கடலில் நிலவிய புயல் சூழல்கள், மேற்குவங்கம், ஒடிசா பகுதிகளில் கூடுதல் ஈரப்பதத்தை உண்டாக்கி பெரும் அயற்சி தரும் வெப்ப அலை களை உருவாக்கியது. மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து வீசிய மேற்கத்திய காற்று, வடக்கு மற்றும் வட மேற்கு இந்தியாவில் நில விய அதிக வெப்பத்துடன் ஈரப்பதத்தையும் சேர்த்தது.
பெரு வெடிப்பிற்குப் பின் நமது அண்டம் எவ்வாறிருந்தது?
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (James Webb Space Telescope) இதுவரை கட்டமைக்கப்பட்டதில் மிகப் பெரியதும் அதிக ஆற்றல் கொண்ட தும் ஆகும். பெருவெடிப்பிற்குப் பின் 20 கோடி (200 மில்லியன்) ஆண்டு களில் நமது அண்டம் எவ்வாறிருந்தது என்பதை அறிவியலாளர்கள் காண்பதற்கு அது உதவும். அண்டத்தில் முதன்முதலாக உருவான சில மண்டலங்களை அது படம் பிடிக்கும். நமது சூரிய மண்டலத்தில் புதிய நட்சத்திரங்களும் கோள்களும் உருவா வதை தூசு மேகங்களிடையே அது நோக்கும். சூரியனைப் போன்ற பிற நட்சத்தி ரங்களை சுற்றும் கோள்களின் வளி மண்டலத்தை ஆய்வு செய்யும். ஒரு டென்னிஸ் மைதானத்தின் அகலமும் மூன்று தள வீட்டின் உயரமும் கொண்டது இந்த தொலை நோக்கி. அதை விண்ணில் ஏவும் ராக்கெட்டில் அடக்குவதற்காக அது ஒரிகாமி முறை யில் மடக்கப்பட்டது. விண்வெளியில் அது தானாக விரிந்து கொள்ளும். நம் கண்களால் காண முடியாத அகச்சிவப்பு அலை வரிசையில் அது அண்டத்தை காண்கி றது. (ஒரு தீ விபத்தில் மக்களை காப்பாற்றுவதற்காக புகையின் நடுவே காண்ப தற்கு தீயணைப்பு வீரர்கள் அகச்சிவப்பு காமிராவை பயன்படுத்துகின்றனர்.) சூரியக் கதிரின் வெப்பத்திலிருந்து தொலைநோக்கியை காப்பதற்காக ஒரு சூரிய கவசம் உள்ளது. மடங்கி விரியக் கூடிய சிறு சிறு கண்ணாடிகளால் அது தொலைதூர கோள்களி லிருந்து வரும் ஒளியை பெற்று குவிக்கிறது. அதன் மேலுள்ள தங்க தகடுகளின் மூலம் அகச்சிவப்பு கதிர்களை பிரதிபலிக்கிறதாம்.
இந்த ஆண்டு மழை குறைவிற்கு காரணம் சின்னப் பையனா? சின்னப் பெண்ணா?
உலகளவில் 1850ஆம் ஆண்டிலிருந்து பதியப்பட்ட வெப்பத்தை ஒப்பிட்டு, சென்ற ஆண்டு(2023) அதிக வெப்பமான ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆண்டின் சராசரி வெப்பம் 18ஆம் நூற்றாண்டு வெப்பத்தைவிட 1.4டிகிரி செல்சியசும் 19ஆம் நூற்றாண்டைவிட 1.18 டிகிரி அதிகமாகவும் இருந்ததாம். இது ஒரு ஆண்டில் மட்டும் காணப்பட்டதல்ல. 2014-2023 ஆண்டுகளே அதிக வெப்பமான 10 ஆண்டுகளாகும். இந்த அதிக வெப்பமானது ‘எல் நினோ’(El Nino) எனப்படும் நிகழ்வினால் இன்னும் அதிகமாகியது. ‘சின்னப் பையன்’ என்று பொருள்படும் இந்த நிகழ்வு கடல் வெப்பம், வளிமண்டல அழுத்தம் இரண்டின் கூட்டுக் கலவையாகும். இதற்கு எதிர்மறையாக ‘எல் நினா’ (El Nina) எனப்படும் (சின்னப் பெண்) குளிர் நிகழ்வும் நடைபெறும். புவிவெப்பம் அதிகமாவதற்கு இந்த நிகழ்வுகள் காரணமல்ல; ஆனால் இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு நடுக்காலம் வரை எல் நினோ தொடர்ந்து நீடித்ததனால், இந்திய தீபகற்ப பகுதியில் பருவ மழை பலவீனமாக உள்ளதாம். ஜூன் மாத மழையளவு நீண்ட கால சராசரியை விட 20 விழுக்காடு குறைவாக உள்ளது. இதுவும் அதி வெப்பத்திற்கு ஒரு காரணம். இதனால் கோடைகால விதைப்பு மற்றும் காரிஃப் பருவ பயிரிடுதல் பாதிக்கப்படும். இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் எல் நினோ, ஜூன் மாதத்தில் எல் நினோவாக மாறும் என்று பருவநிலை அறிவியலாளர்கள் கணிக்கின்றனர். அதோடு மழைப் பொழிவும் அதிகரித்து வெப்பமும் குறையும்.