பல்லாண்டுகாலம் உழைக்கும் வைர பேட்டரி
உலகில் முதன் முதலாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்திருக்கும் பேட்டரியை பிரிஸ்டல் பல்கலைக்கழக அறிவியலாளர்களும் பொறியாளர்களும் இணைந்து தயாரித்துள்ளார்கள். இது கார்பன்-14 டயமண்ட் பேட்டரி என அழைக்கப்படுகிறது. ஒரு பொருளின் காலத்தை கணிக்க கார்பன்-14 எனும் கதிரியக்க வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை கார்பன் டேட்டிங் (carbon dating) என்றழைக்கப்படுகிறது. இந்த வேதிப்பொருள் பல்லாண்டு காலம் குறைந்த அளவு ஆற்றலை வெளிவிட்டுக் கொண்டிருக்கும். இதே முறைதான் இந்த பேட்டரியில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு செயற்கை வைரத்தினுள் சிறிய அளவு கார்பன்-14 பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து வேகமாக வெளிவரும் எலெக்ட்ரான்களை பேட்டரி கைப்பற்றி இயங்குகிறது என்கிறார் பிரிட்டனின் (ஐக்கியக் குடியரசின்) அணு ஆற்றல் நிறுவனத்தின் டிரிட்டியம் எரிபொருள் சுழற்சி மய்யத்தின் இயக்குனர் சாரா கிளார்க். இந்த பேட்டரி பரந்துபட்ட பயன்பாட்டுத் திறன் கொண்டது. இதனால் பேஸ் மேக்கர், செவித்திறன் கருவிகள், செயற்கைக் கண்கள் போன்ற மருத்துவ தொழில் நுட்பத்தில் பேட்டரி மாற்ற தேவையிருக்காது. விண்வெளி, ஆழ்கடல் போன்ற சூழலில் பேட்டரி மாற்றுவது இயலாது. அங்கும் இது பயன்படலாம். சரக்குகளையும் விமானங்களையும் கண்காணிப்பதற்கும் பயன்படுத்தலாம். கைபேசி, லேப்டாப், வீட்டு பாதுகாப்பு கருவிகள், மின் வாகனங்கள் போண்றவற்றில் இது பயன்படாது.
டின்னிட்டஸ் கோளாறு குறித்த ஆய்வு
உலகின் மக்கள் தொகையில் 15% பேர் டின்னிட்டஸ்(tinnitus) எனும் கோளாறினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் காதில் ஏதோ ஒரு ஓசை கேட்டுக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் செவித்திறன் இழப்போடு இந்தக் கோளாறு இணைந்து வருகிறது. இது பெரும் தொந்தரவாக இருப்பதோடு மன அழுத்தத்திற்கும் இட்டு செல்லும். தற்போது இதைக் குணப்படுத்த சிகிச்சை எதுவும் இல்லை. இதைப் புரிந்து கொள்ள தூக்கத்தைப் பற்றியும் அப்போது மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். டின்னிட்டஸ் ஒரு மாய உணர்வு (phantom percept). பெரும்பாலான மக்கள் தூங்கும்போதுதான் மாய தோற்றங்களை உணர்கிறார்கள். ஆனால் டின்னிட்டஸ் விழித்திருக்கும்போதே நடைபெறுகிறது. இவர்களுக்கு மூளையின் சில பகுதிகள், குறிப்பாக கேட்கும் திறன் பகுதிகள், மிகையாக செயல்படுகின்றன. நாம் தூங்கும்போது ஆழ்ந்த உறக்க நிலையில் மூளை மெதுவான அலை பாங்கில் செயல்படுகிறது. இதனால் நரம்பு இணைப்புகள் அன்றாட தேய்மானத்திலிருந்து புத்தாக்கம் பெறுகின்றன. இதை மூளையின் எல்லாப் பகுதிகளும் ஒரே மாதிரி உணர்வதில்லை. நாம் விழித்திருக்கும்போது எந்தப் பகுதிகள் அதிகம் செயல்பட்டதோ, அங்கே அதிகமாக இருக்கும். மேலும் அப்போது நினைவு, செவித்திறன் போன்ற பகுதிகளை ஒன்றாக தூண்டுகிறது. இதனால்தான் டின்னிட்டஸ் கோளாறு உள்ளவர்கள் இரவில் மற்றவர்களைவிட அதிகம் தொந்தரவான உறக்கம், இரவு பயங்கரம் ஆகியவற்றை உணர்கிறார்கள். ஆனால் மற்றவர்களைவிட குறைவான ஆழ்ந்த உறக்கம் பிடித்தாலும் அது டின்னிட்டஸால் பாதிக்கப்படவில்லை என்று தோன்றுகிறது என்கிறார் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியல் ஆய்வாளர் லினஸ் மிலின்ஸ்கி. ஏனென்றால் ஆழ்ந்த உறக்கத்தின்போது, மூளையின் செயல்பாடுகள் உண்மையில் டின்னிட்டஸை அடக்குகிறது. விழித்திருக்கும்போது அதிகம் செயல்பட்ட பகுதிகளில் மெதுவான அலை பாங்கு அதிகம் இருக்கும். எனவே டின்னிட்டஸ் அடக்கப்படலாம். மூளை எவ்வாறு டின்னிட்டஸை அடக்குகிறது என்பதை அறிந்தால் அதற்கான சிகிச்சை முறையையும் கண்டுபிடிக்கலாம். இந்த ஆய்வு ‘The Conversation’ என்கிற இதழில் வந்துள்ளது.
மீத்தேன் வாயுவிலிருந்து பயனுள்ள பாலிமர்
நிலப்பரப்புகளிலும் சதுப்பு நிலங்களிலும் அழுகும் உயிரிக் குவியல்களிலும் செறிவாக உள்ள ஒரு பாக்டீரியாவினால் மீத்தேன் வாயு உண்டாக்கப்படுகிறது. விவசாயமே மீத்தேனின் முக்கிய உற்பத்தி இடம். மேலும் போக்குவரத்து, சேமிப்புக் கிடங்குகள், இயற்கை எரிவாயுவை எரிப்பது போன்றவற்றிலும் துணைப் பொருளாக உண்டாகிறது. இது, கார்பன் டை ஆக்சைடை விட குறைவாக இருந்தபோதிலும் புவி வெப்பமாவதற்கு அதிக அளவில் ஏதுவாக இருக்கிறது. ஏனெனில் அது வளி மண்டலத்தில் கார்பன் டைஆக்சைடை விட அதிக அளவில் வெப்பத்தை தக்க வைக்கிறது. மீத்தேனை என்ன செய்வது என்பது நீண்ட காலப் பிரச்சனையாக இருக்கிறது என்கிறார் எம்ஐடி பல்கலைக்கழகத்தை சேர்ந்த வேதியியல் பொறியாளர் கார்பன் பி.டப்ஸ். இவரது தலைமையில் நடந்த ஆய்வில் ஒரு புதிய கிரியா ஊக்கியைக் கொண்டு மீத்தேனை பயனுள்ள பாலிமராக மாற்றும் வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிரியா ஊக்கி அறை வெப்பத்திலும் வளிமண்டல அழுத்தத்திலும் வேலை செய்கிறது. எனவே மீத்தேன் உண்டாகும் இடங்களான மின் உற்பத்தி ஆலைகள், மாட்டுத் தொழுவங்கள் போன்ற இடங்களில் எளிதாகவும் குறைந்த செலவிலும் இதை பயன்படுத்தலாம். இதற்கு முன் மீத்தேனை வேறு பொருளாக மாற்றுவதற்கு உயர் வெப்பமும் உயர் அழுத்தமும் தேவைப்படுவதால் அது கடினமாக இருந்தது. இப்போது செய்யப்பட்டுள்ள ஆய்வில் ஏற்கனவே பயன்பட்ட சியோலைட் எனும் கிரியா ஊக்கியுடன் ஒரு நொதிப்பொருளை சேர்த்து இரட்டை ஊக்கியாக பயன்படுத்தப்பட்டது. இதில் கிடைக்கும் வேதிப்பொருளுடன் யூரியாவை சேர்த்து பிசின் போன்ற பாலிமர் தயாரிக்கப்படுகிறது. இது ஜவுளி, இயற்கை எரிவாயுக் குழாய்கள் ஆகியவற்றில் பயன்படும். இந்த ஆய்வு ‘Nature Catalyst’ எனும் இதழில் வெளிவந்துள்ளது.
ஒட்டகங்களுக்காக ஒர் ஆண்டு
2024 ஆம் ஆண்டை சர்வதேச ஒட்டகங்களுக்கான ஆண்டாக (International Year of Camelids) ஐநா அறிவித்துள்ளது. இந்த உயிரினங்கள் ஆர்டியோடாக்டிலா (Artiodactyla) என்ற குடும்பத்திற்குட்பட்ட டைலோபோடா (Tylopoda) ( அல்லது குளம்புடைய விலங்குகள் pad-footed animals) வகையைச் சேர்ந்தவை. இவை கேமலெஸ் (Camelus) மற்றும் கேமலிடே (Camelidae) என்று இருவகைப்படும். ஒட்டகங்கள், லாமாக்கள் (llamas), அல்பாக்கள் (alpacas), குவானா கோஸ்கள் (guanacos) மற்றும் விக்கும்யஸ் (vicuñas) என்பவை இந்த குடும்பத்தில் உள்ள உயிரினங்கள். இவை வட ஆப்பி ரிக்கா, தென்மேற்கு ஆசியா, மத்திய ஆசியா மற்றும் தென்னமெரிக்காவில் வாழும் நான்கு இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. உலகெங்கும் இருக்கும் பாலைவனப் பகுதிகளிலும் மலைப்பிரதேசங்களிலும் வாழும் மக்கள் இந்த உயிரினங்களையே தங்கள் வாழ்வாதாரத்திற்கு நம்பியுள்ளனர். பூமியில் சாதகமற்ற சூழல் மண்டலங்களில் வாழும் லட்சக்கணக்கான ஏழை குடும்பங் களைச் சேர்ந்த இவர்களுக்கு இந்த உயிரி னங்கள் மிக முக்கியமான வாழ்வாதார மார்க்கமாக உள்ளது என்பதால் ஐநா இந்த ஆண்டை ஒட்டகங்களுக்கான ஆண்டாக அறிவித்துள்ளது. சூழல் மற்றும் உயிர்ப் பன்மயத்தன்மை பாதுகாப்பு, சத்துணவு போன்றவற்றின் பின்னணியில் காலநிலை மாற்றத்துடன் பொருந்தி வாழும்இவற்றின் முக்கியத்து வம் பற்றி உலக மக்களிடையில் விழிப்பு ணர்வை ஏற்படுத்த இந்த ஆண்டு கொண்டா டப்படுகிறது. 2014 இல் பொலிவியா 2016 ஆம் ஆண்டை ஒட்டகங்களுக்கான ஆண்டாக அறிவிக்க ஐநாவிடம் கோரியது. ஆனால் 2016 பயிறுவகைப் பயிர்க ளுக்கான சர்வதேச ஆண்டாக கொண்டா டப்பட்டது. இந்த உயிரினங்களின் வளர்ப்பின் மூலம் நீடித்த நிலையான வளர்ச்சி ஏற்படுகிறது. இறைச்சி, பால், கம்பளி உருவாக்க உதவும் தோல் போன்ற வற்றை தருகிறது. மிகச்சிறந்த போக்கு வரத்து மூலமாகவும் இவை விளங்குகின்றன. உலகில் இன்று 120,000 முதல் 998,000 வரை ஒட்டகங்கள்வாழ்வதாகக் கருதப்படுகிறது. துர்க்மேனிஸ்தான், எகிப்து, கஜ கிஸ்தான், ஆப்கானிஸ்தான், டுனீஷியா, ஓமன், சௌதி அரேபியா, நைஜீரியா, சீனா, பொலிவியா போன்ற இடங்கள் உட்பட 90 நாடுகளில் இவை அதிகம் வாழ்கின்றன. ஒட்டக இறைச்சி உலகின் சில குறிப்பிட்ட பகுதிகளில் உணவாகப் பயன்படுகிறது. அவற்றில் சில எரிட்ரியா, சோமாலியா, ஜிபூட்டி, சௌதி அரேபியா, எகிப்து, லிபியா, சிரியா, சூடான், எத்தியோப்பியா மற்றும் கஜகிஸ்தான். புரதச் சத்துள்ள உணவு அரிதாக கிடைக்கும் வறண்ட இடங்களில் மாற்று புரத உணவாக நீண்ட கால வரலாற்று, கலாச்சார தொடர்புடைய பகுதிகளில் இதன் இறைச்சி உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஒட்டகப் பாலில் புரதம், கால்சியம், பாஸ்ப ரஸ், வைட்டமின் சி மற்றும் நயாசினாகிய சத்துகள் உள்ளன. இது சிறந்த இயற்கை வழி நோய் தடுப்புப் பொருளாகவும் பயன்படு கிறது. பாலைவனக்கப்பல் என்று அழைக்கப் படும் இவை அங்கு ஒரு சிறந்த போக்கு வரத்து மூலமாக உள்ளது. ஒரே சம யத்தில் 15 லிட்டர் வரை நீர் அருந்தும் திறன் பெற்றது. உடலில் இருக்கும் நீர்சேமிப்பு அறைகளில் இது சேமித்துவைக்கப்படு கிறது. இயற்கையின் படைப்பில் இவை களும் நம் சொந்தங்களே!
மன அழுத்தத்தை குறைக்க உதவும் பயண நேர இயற்கை ஒலிகள்
ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் வேலை முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பயணிக்கும் பயணிகள் பறவை அழைப்புகள் போன்ற இயற்கை ஒலிகள் மன அழுத்தத்தை குறைக்கிறது என்று புதிய ஆய்வு கூறுகிறது. யு கே மத்திய இலண்டனில் இருந்து 143 மைல் 143 மைல் தொலைவில் உள்ள வேமவுத் (Weymouth) வரை இயக்கப்படும் தென் மேற்கு இரயில்வே இந்த ஆய்வை பயணிகளுக்காக நடத்தியது. இயற்கையான நில அமைப்புகளில் இருந்து வரும் ஒலிகளை கேட்கும்போது பயணிகளின் மன அழுத்தம் 35% குறைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஓடும் இரயிலில் பறவையின் அழைப்பு
பள்ளி மாணவர்கள் மாலையில் வீடு திரும்பும் நேரத்தில் கூட்டம் அலை மோதும் இரயில்களில் ஏறி பயணிக்கும்போது பள்ளி யில் உருவாகும் மன அழுத்தம் பயணத்தின் போதும் தொடர்வ தால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பொதுவாக பயண நேரத்தில் உரையாடல்கள், இசையை கேட்பதை விட பறவை அழைப்புகள், நீர் வீழ்ச்சிகளின் ஓசை போன்றவற்றை கேட்பது அவர்களின் மன நலத்திற்கு உதவு கிறது. இந்த ஆய்வு தென் மேற்கு இரயில்வேயில் ஓடும் ஒரு இரயில் சேவைக்காக ஆக்ஸ்போர்டு பரி சோதனை உளவியல் பிரிவின் பேரா சிரியர் சார்ல்ஸ் ஸ்பென்ஸ் (Charles Spence) என்பவரால் மேற்கொள் ளப்பட்டது. இது பற்றி உண்மை யான வாழ்க்கைச் சூழலில் நடத்தப்பட்ட முதல் ஆய்வு இது. குறிப்பிட்ட சில பயணிகள் தேர்ந்தெ டுக்கப்பட்ட இயற்கை ஒலிகளை கேட்கும்படி செய்யப்பட்டது. இந்த ஒலிகளில் பறவைகளின் குரல் அழைப்புகள், ஓடும் நதியோசை கள், புயல்களின் ஓசை போன்றவை அடங்கும். இவற்றுடன் பயணிகள் வழக்க மாக கேட்கும் இசையும் ஒலிக்க விடப்பட்டு ஆராயப்பட்டது. லண் டன் வாட்டர்லூவில் (Waterloo) இருந்து இதே பரிசோதனைக்காக ஒரு சிறப்பு இரயில் இயக்கப் பட்டது. அதில் பயணம் செய்த வர்களிடையில் இதே ஆய்வு நடத்தப்பட்டது. 46 பேர் அடங்கிய குழுவினரிடம் பயணத்திற்கு முன்பு அவர்களின் மனநிலையை (mood) மதிப்பிடும்வகையில் வினாக்கள் அடங்கிய கேள்வித் தாள் கொடுக்கப்பட்டது. பிறகு 15 நிமிட இடைவேளைகளில் வேறு கேள்விகள் கொடுக்கப்பட்டு ஆராயப்பட்டது. இயற்கை ஒலிகளை கேட்ட பயணிகளின் மன அழுத்தம் 35 சதவிகிதமும், பதட்டம் 32 சத விகிதமும் குறைந்தது ஆய்வின் முடிவில் தெரியவந்தது. ஆனால் வழக்கமான இசையை மட்டும் கேட்டவர்களிடம் மன அழுத்தம் 11% மட்டுமே குறைந்தது. இது குறித்து இதற்கு முன்பு நடந்த பெரும்பாலான ஆய்வுகள் உண்மையான வாழ்க்கைச் சூழ்நிலையில் நடைபெறவில்லை. அதனால் அந்த ஆய்வு முடிவுகள் சூழலியல் மதிப்பை பெறவில்லை. அவை ஆய்வகங்களிலேயே நடந்தன. இந்த சோதனை மட்டுமே ஓடும் இரயிலில் உண்மையான பயணிகளிடம் மேற்கொள்ளப்பட் டது. என்றாலும் சோதனைக்காக ஒதுக்கப்பட்ட நேரம், இயக்கத்தின் போது உண்டாகும் நெருக்கடிகள் போன்றவை ஆய்வுக்குரிய நேரத்தை குறைத்தன. என்றாலும் இயற்கை ஒலிகள் பயணிகளில் மன அமைதியை ஏற்படுத்தி அவர் களின் மன நலத்தை ஆரோக்கி யமாக வைத்திருக்க உதவி
அமைதி தரும் இயற்கை ஒலிகள்
இந்தச் சோதனை நீண்ட தூர விமான, சாலைப் பயணங்களில் நடத்தப்படவேண்டும் என்று சார்ல்ஸ் ஸ்பென்ஸ் கூறுகிறார். “இரயில் சேவைகளை எண்ணற்ற வர்கள் பயன்படுத்துகின்றனர். அவர்களின் மன அமைதியை அதி கரிக்க உதவும் செயல்கள் எவை என்று இரயில் நிறுவனம் ஆராய விரும்பியதன் விளைவே இந்த ஆய்வு. பயணிகள் தங்கள் மொபைல், கணினியின் இயக்கத்தை நிறுத்தி விட்டு இயற்கையுடன் அதிக நேரத்தை செலவிட்டால் ஏற்படும் நன்மைகளை ஆய்வின் போது நேரடியாக காணமுடிந்தது. கொள்ளை நோய் ஏற்பட்டபோது சில பயணிகள் கூடுதலாக வேலை செய்ய விரும்பினர். அதன் மூலம் அவர்கள் மன மகிழ்ச்சி அடைந்த னர். வேறு சிலர் திரைச்சீலை பின்னல் வேலைகளிலும் இத்தா லிய மொழியை கற்பதிலும் ஒலி புத்தகங்களை படிப்பதிலும் தங்கள் பயண நேரத்தை செலவிட்டனர். ரயிலில் பயணம் செய்யும் போது இயற்கையின் சத்தங்களை கேட்பது மன அழுத்தத்தை குறைக்கிறது என்பது இந்த ஆய்வில் இருந்து தெளிவாக நிரூ பிக்கப்பட்டுள்ளது” என்று தென் மேற்கு இரயில்வேயின் மூத்த கொள்கை வகுப்பாளர், புதிய கண்டுபிடிப்புகளுக்கான பிரிவின் மேலாளர் டான் பைனர் (Dan Piner) கூறுகிறார். இந்த ஆய்வு முடிவினால் தூண்டப்பட்டு இரயில் நிறுவனம் வேலை பார்க்கும் இடத்தில் ஊழி யர்களின் நலனுக்காக செயல் படும் அன்மைண்ட் (Unmind) என்ற அமைப்புடன் இணைந்து பயணிகளின் மன நலத்தை பேண உதவும் இயற்கை ஒலிகளுடன் கூடிய இசைத் தொகுப்புகளை ரயில் பயணங்களின்போது ஒலிக்க விட ஏற்பாடு செய்கிறது. ஆப்பிள் இசை, வலை ஒளி, ஸ்பாட்டிஃபை செயலி போன்ற வற்றில் ஒலிகள் பயணிகளுக்கு கிடைக்க வசதி செய்யப்பட்டுவரு கிறது. இதில் ஒவ்வொரு இசைத் தொகுப்பும் குறுகிய, நடுத்தர, நீண்ட நேரம் ஒலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பயண நேரத்திற்கேற்ப இந்த ஒலிகளை பயணிகள் தேர்ந்தெடுத்து கேட்க லாம். சரியான நேரத்திற்கு ஓடும் இரயில்கள் பயணிகளின் மன அழுத்தத்தை குறைக்கின்றன.
இயற்கையுடன் இணைந்த வாழ்வு
பயணத்தின்போது 64% பயணி கள் போனில் உரத்த குரலில் பேசு வதையும், 54% பயணிகள் இருக்கை யின் மேல் தங்கள் கால்களை வைத்துக்கொள்வதையும், 56% பேர் செவி வழி கேட்க உதவும் போன் கருவி (Earphone) வசதி இல்லாமல் இசை கேட்பதையும் பெரும் தொல்லை என்று கருதி னர். இரயில் நிறுவனம் 200,000 பேரிடம் நடத்திய மற்றொரு ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இயற்கையுடன் இணைந்த வாழ்வே மனித வாழ்க்கையை பொருளுடையதாக மாற்று கிறது. இந்த ஆய்வின் மூலம் இயற்கை இடங்கள் பாது காக்கப்படவேண்டும் என்ற உணர்வை மனிதரிடம் ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்ற னர்.