ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை திருவான்மி யூரில் செவ்வாயன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, குடியரசு தலைவர் உரைக்கு பிறகு செய்தி யாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ‘செல்வத்தை வழங்கும் மகாலட்சுமியிடம், நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வெற்றி, செழிப்பு, நல்வாழ்வை வழங்க வேண்டும். அவர்கள் ஆசிர்வதிக் கப்பட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்’ என்றார். அதாவது, பட்ஜெட்டில் ஏழை எளிய மக்களுக்கு எதுவும் இருக்காது. ஆண்டவன் தான் அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று கூறியதை சுட்டிக்காட்டினார்.
“நிதியமைச்சரின் உரையிலேயே, பட்ஜெட் எந்த அளவு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவானது, ஏழை எளிய மக்களுக்கு எதிரானது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன” என்று கூறிய ஜி. ராமகிருஷ்ணன், “கடந்த 10 ஆண்டுகளில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகள் செலுத்தாத கடன் 12 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளனர். இது பட்ஜெட்டில் வராது. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மூலம் 26 லட்சம் கோடி ரூபாயை மக்களிடமிருந்து கொள்ளை அடித்துள்ளனர்.
அதுவும் பட்ஜெட்டில் இடம் பெறாது. 2022-23 ஆண்டுகளில் கார்ப்பரேட்டுகளுக்கு கிடைத்த லாபம் 10.88 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2023-24 ஆம் ஆண்டில் 14 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள் ளது. இத்தகைய மோசடிகளோடு தான் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்” என்று சாடினார். மேலும், “உணவு, கல்வி, சுகாதாரம், நூறுநாள் வேலைத்திட்டம் போன்றவற்றிற்கான மானியத்தை குறைத்துள்ளனர். பட்டியலின மக்களின் மேம்பாட்டிற் காக தொகையில் 44 ஆயிரம் கோடி ரூபாயை குறைத்துள் ளனர். எனவே, மக்கள் விரோத, கார்ப்பரேட் கம்பெனி களுக்கான இந்த பட்ஜெட்டை கண்டித்து போராடு கிறோம்” என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.