articles

img

பிப். 14- 20 நாடு முழுவதும் மக்களிடம் பிரச்சாரம்

பெருமுதலாளிகளுக்கு ஆதரவான பட் ஜெட்டுக்குப் பதிலாக, மக்கள் நல னுக்கான மாற்று பட்ஜெட் ஒன்றை இடதுசாரிக் கட்சிகள் முன்மொழிந்துள்ளன. இவற்றை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்காக வரும் பிப்ரவரி 14 முதல் 20 வரை ஒருவார காலத்திற்கு வெகுஜன பிரச்சாரத்தையும் அறிவித்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கி ணைப்பாளர் பிரகாஷ் காரத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் து. ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனி னிஸ்ட் - லிபரேசன்) பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, புரட்சி சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய  பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் ஜி.தேவராஜன் ஆகிய இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் திங்களன்று சந்தித்து, ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்து விவா தித்தனர். அதன் முடிவில், கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கை வருமாறு:

மக்கள் பிரச்சனைகள் குறித்து கவலைப்படாத ஒன்றிய பட்ஜெட்

2025-26ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் மக்களின் உடனடி மற்றும் அடிப்படைத் தேவைக ளுக்குத் துரோகம் செய்துள்ள ஒரு பட்ஜெட்டாகும். மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ள நிலை யில், அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்ப தற்குப் பதிலாகவும், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையிலும், வேலையில் உள்ளோரின் உண்மையான சம்பளம் சுருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையிலும், இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல், மோடி அரசாங்கம் இந்த பட்ஜெட்டின் மூலம் இதுவரை செய்துவந்த செலவி னங்களையும் வெட்டி, பொருளாதாரத்தை ஊக்கு விக்கப் போகிறோம் என்ற பெயரில் பணக்காரர்க ளுக்கு சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது.

பெருமுதலாளிகளுக்கே  மேலும் மேலும் சேவகம்

பணக்காரர்கள் மற்றும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது வரிகளைப் போட்டு வருவாயைப் பெருக்குவதற்குப் பதிலாகவும், வேலை வாய்ப்புகளை அதிகரித்திடும் விதத்தில் பொது முதலீடுகளை விரி வாக்குவதற்குப் பதிலாகவும், மக்களுக்குக் குறைந்த பட்ச ஊதியத்தை உத்தரவாதம் செய்வதற்குப் பதி லாகவும், இவை அனைத்திற்கும் எதிரான பாதை களை இந்த அரசாங்கம் தேர்ந்தெடுத்திருக்கிறது. இந்தப் பட்ஜெட்டானது தனியார் முதலீடுகளை மேம் படுத்துவதன் மூலம் செல்வம் பெருமளவில் ஒரு சிலரிடமே குவிவதற்கு இட்டுச்சென்றிருக்கிறது, நாட்டின் பொதுச் சொத்துக்கள் தனியார் துறையின் சேவகத்திற்கு மடைமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. மின்சாரத் துறையையும் தனியார்மயமாக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

கல்வி, சுகாதாரம், சமூகநலத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு இல்லை

ஒன்றிய பட்ஜெட் வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்சனையை கவனத்தில் கொள்ளவில்லை. உணவு மானியங்கள், வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த நடவடிக்கைகள், கல்வி, சுகாதாரம், கிரா மப்புற வளர்ச்சி, சமூக நலம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றிற்கான செலவினங்கள் ஒதுக்கீடு கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற் கான (MNREGA) ஒதுக்கீடும் சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட அதே 86 ஆயிரம் கோடி ரூபாய் அள விற்கே ஒதுக்கி தேக்கநிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆயினும் இத்திட்டத்திற்கான தேவை அதி கரித்திருக்கிறது.  

மறைமுக வரிகளால்  ஏழைகள் மீதே சுமை

வருமான வரி உச்சவரம்பு 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது மக்களில் ஒரு சாராருக்கு நிவாரணம் அளித்திருக்கிறது. ஆனால் விலைவாசி உயர்வாலும், ஜிஎஸ்டி போன்ற மறைமுக வரிகளா லும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் உழைக்கும் வர்க் கத்தினரில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பிரச்சனைகள் பட்ஜெட்டில் கண்டுகொள்ளப்பட வில்லை.

வரி விலக்கு வரம்பை உயர்த்தியதால் ஏற்பட்ட இழப்பை, பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட்டுகள் மீதான வரி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் ஈடு செய்திருக்கலாம். ஆனால் அரசாங்கம் அவ்வாறு செய்யாமல், கார்ப்பரேட்டுகளுக்கும் பெரும் பணக்கா ரர்களுக்கும் ஒரு வரப்பிரசாதத்தை வழங்கியுள்ளது.

இடதுசாரிகளின் புதிய முன்மொழிவுகள்

பட்ஜெட்டில் காணப்படும் மக்கள் விரோத முன்மொழிவுகள் அனைத்தையும் இடதுசாரிக் கட்சிகள் நிராகரிக்கின்றன. அவற்றுக்குப் பதிலாக மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் விதத்தி லும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கிடும் விதத்திலும் மற்றும் ஊதியங்களை உயர்த்திடும் விதத்திலும் மாற்று முன்மொழிவுகளை இடதுசாரிக் கட்சிகள் முன் வைக்கின்றன.

மக்களின் கல்வி உரிமை, சுகாதாரத்திற்கான உரிமை மற்றும் சமூகப் பாதுகாப்பு பயன்களைப் பெறு வதற்கான உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் அமைந்திட இந்த மாற்று முன்மொழிவுகள் உதவிடும்.

நிதிச்சட்டமுன்வடிவில் இடம்பெறும் வகையில் கீழ்க் கண்ட முன்மொழிவுகளை அறிமுகப்படுத்திட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் கோருகின்றன:

பெருமுதலாளிகள் மீது  4 சதவிகித வரி விதித்திடுக!

 (1) நாட்டில் உள்ள 200 பில்லியனர்கள் மீதும் (டாலர்  அடிப்படையில்) 4 சதவிகிதம் செல்வ வரியை அறிமுகப்படுத்த வேண்டும்.

(2) வேளாண் விளைபொருள்கள் அனைத்திற்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டரீதியாக நிர்ணயம் செய்ய வேண்டும். வரைவு தேசிய வேளாண் சந்தை கொள்கைத்திட்டத்தை (draft National Policy Framework on Agricultural Marketing) விலக்கிக்கொள்ள வேண்டும்.  

(3) பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதையும்,  தேசியப் பணமாக்கல் திட்டம் (National Monetisation Pipeline) மூலம் பொதுத்துறையின் சொத்துக்களை தனியார்வசம் ஒப்படைப்பதையும் நிறுத்த வேண்டும். இன்சூரன்ஸ் துறையில் 100 சதவிகிதம் அந்நிய நேரடி முதலீட்டை யும் விலக்கிக்கொள்ள வேண்டும்.

நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துக!

(4) மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்கான ஒதுக்கீட்டை 50 சதவிகிதம் உயர்த்த வேண்டும். நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். வயதானவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் இதர சமூகப் பாதுகாப்புப் பயன்களுக்கான ஒன்றிய அர சாங்கத்தின் ஒதுக்கீடுகளை அதிகரிக்க வேண்டும்.

(5) சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்யும் தொகையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதமா கவும், கல்விக்கு ஒதுக்கீடு செய்யும் தொகையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதமா கவும் உயர்த்த வேண்டும்.

(6) பொது விநியோக முறையை வலுப்படுத்தும் விதத்தில் உணவு மானியத்தை அதிகரிக்க வேண்டும்.

மாநிலங்களுக்கான நிதியை அதிகரிக்க வேண்டும்

(7) பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பெண்கள் மற்றும் குழந்தை வளர்ப்புத் திட்டங்க ளுக்கான ஒதுக்கீடுகளை கணிசமாக அதிகரிக்க வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் (ICDS), மற்றும் திட்டப் பணியாளர்க ளுக்கான மதிப்பூதியங்களையும் அதிகரிக்க வேண்டும்.

(8) மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். ஒன்றிய அரசாங்கத்தின் திட்டங்க ளுக்கான நிதிகளையும் கணிசமான அளவிற்கு உயர்த்த வேண்டும். பெட்ரோலியப் பொருட்கள் மீதான செஸ் வரிகளையும், சர்-சார்ஜ் வரிகளை யும் ரத்து செய்ய வேண்டும். ஏனெனில் இவற்றின் மூலம் வசூலாகும் தொகைகள் எதுவும் மாநிலங்க ளுக்கு வழங்கப்படுவதில்லை. 

தெருமுனைக் கூட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் மூலம் பிரச்சாரம்

 எனவே ஒன்றிய பட்ஜெட், நிதிச் சட்டமுன்வடிவின் வழியாக இறுதியாக நிறைவேற்றப்படுவதற்கு முன், இடதுசாரிக்கட்சிகள் அளித்துள்ள

இந்தக் கோரிக்கை கள்/முன்மொழிவுகளுக்கான பிரச்சாரத்தை இடது சாரிக் கட்சிகள் மேற்கொள்ளும்.  இந்த முன்மொழிவுகளுக்கு ஆதரவாக மக்களை அணிதிரட்ட, இடதுசாரிக் கட்சிகள் பிப்ரவரி 14 முதல் 20 வரை ஒருவார காலத்திற்கு வெகுஜன பிரச்சா ரத்தை மேற்கொள்ளும்.  

இடதுசாரிக் கட்சிகளின் மாநிலப் பிரிவுகள், மக்கள் மத்தியில் இத்திட்டங்களைக் கொண்டுசெல்ல நன்கு  திட்டமிட வேண்டும். வீடு, வீடாகச் சென்றும், தெரு முனைக் கூட்டங்கள் நடத்தியும், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தியும் பெரும்பகுதி மக்களி டம் இத்திட்டங்களை கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு இடதுசாரிக் கட்சிகள் அறிக்கையில் கூறியுள்ளன.