நுண்பிளாஸ்டிக் துகள்களை அகற்றுவது எப்படி?
உலகெங்கும் மிக அதிகமாக பரவிவிட்ட நுண் பிளாஸ் டிக்குகள் மனிதர்களின் உடல்நலத்திற்கும் சுற்றுச் சூழ லுக்கும் தீவிர ஆபத்தை விளைவிக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள் ஆகியவற்றின் சிதைவுகள், வாக னங்களின் டயர்களிலிருந்து உதிரும் ரப்பர், செயற்கை துணி களிலிருந்து பிரியும் நுண் இழைகள் ஆகியவற்றிலிருந்து இவை உண்டாகின்றன. மணல்துகள் அளவே இவை உள்ளன. கடல், மலை, காடு மற்றும் நகர்ப்புறம் என இவை எல்லா இடங்களி லும் காணப்படுகின்றன. இவற்றை விழுங்கி விடுவதாலும் அல்லது இந்தக் குப்பைக்குள் சிக்கிக் கொள்வதாலும் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. கடல் உணவு, உப்பு, பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் ஆகியவை மூலம் மனித உணவுச் சங்கிலிக்குள் இவை நுழைந்து விடுகின்றன. உலக சுகாதார அமைப்பும் இதை குறிப்பிடுகிறது. இதனால் வீக்கம், ஆக்சிடேடிவ் அழுத்தம் மற்றும் கருவுறுதல் சிக்கல்கள் ஆகியவை ஏற்படுகின்றன என ஆய்வுகள் கூறு கின்றன. இந்தச் சூழலில் சீனாவிலுள்ள குவாங்சு பகுதியை சேர்ந்த அறிவியலாளர்கள் குழாய் நீரிலிருந்து நுண் பிளாஸ்டிக்குகளை அகற்றுவது குறித்து ஆய்வு செய்து ‘சுற்றுச் சூழல் அறி வியல் & தொழில்நுட்பக் கடிதங்கள்’’ எனும் இதழில் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இந்த முறையில் கடின மற்றும் மென் நீரை ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைத்து வடிகட்டினர். கடின நீரை கொதிக்க வைக்கும்போது 90% நுண்பிளாஸ்டிக்குகள் அகற்றப் படுகின்றன. மென் நீரில் 25% நீக்கப்படுகின்றன. கொதிக்க வைக்கும்போது உண்டாகும் கால்சியம் கார்பனேட், பிளாஸ்டிக் துகள்களை சிக்க வைத்துக் கொள்கிறது. இது ஒரு எளிமையான அதே சமயம் திறன் கொண்ட முறை யாகத் தெரிகிறது. இதை பெரிய அளவில் செய்ய இயலுமா என்பதும் நீரின் தரத்தின் மீது அதன் தாக்கம் குறித்தும் கூடுதல் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.
3000 ஆண்டு பழமையான எழுத்துகள்
ஸ்பெயினின் தென்மேற்குப் பகுதி யில் எழுத்துக்களுடன் கூடிய தொன் மையான பாறைப்பலகை ஒன்று அகழ்வாய்வாளர்களால் கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இது 3000 ஆண்டு களுக்கு முன் வாழ்ந்த டார்டெஸஸ் நாக ரீகத்தை சேர்ந்தது என்று நம்பப்படு கிறது. இந்த நாகரீகம் பேலியோ ஹிஸ் பானிக் எனப்படுகிறது. இதன் எச்சங்கள் மிகக் குறைவாகவே உள்ளதால், இது அழிந்துவிட்ட நாகரீகமாக கருதப்பட்டு வந்தது. ‘டார்டெஸஸ் கட்டமைப்பு’ என்கிற திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த அகழ்வாய்வு ‘முக்கிய நோக்கம் டார்டெஸியன் பொருள் கலாச்சா ரத்தை வரையறை செய்வதும் அகழ்ந்தெடுக்கப்பட்ட அடோப் வகை கட்டடங்களை ஆய்வு செய்து அந்தப் பகுதியில் கட்டடக் கலையை ஒருங்கி ணைந்த அம்சமாக அறிமுகம் செய்வது மாகும்” என்று ஸ்பெயின் தேசிய ஆய் வுக் கழகத்தின் இணைய தளம் கூறு கிறது. இந்த பாறைப் பலகையில் 21 தொடர் குறியீடுகளும் வீரர்களின் உருவங்க ளும் பொறிக்கப்பட்டுள்ளது போல் தோன்றுகிறது என்கிறார்கள் நிபு ணர்கள். 600 பொ.ஆ.மு காலத்தில் இவை செதுக்கப்பட்டிருக்கலாம். இந்த மொழியில் 27 எழுத்துகள் இருந்திருக்க லாம். பலகையின் உடைந்து போன பகுதியில் 6 எழுத்துகள் மறைந்து போயி ருக்கலாம். பலகை முற்றிலும் சம பக்கமாக இருந்து எழுத்துகள் மூன்று பக்கங்க ளில் முழுமையாக இருந்தால் மொத்தம் 32 குறியீடுகளாக ஆகும். ஆகவே மறைந்து போன எழுத்துகள் 11 அல்லது அதற்கு மேற்பட்டதாகவும் இருக்க லாம். என்கிறார் பார்சிலோனியா பல்க லைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் ஜுவான் ஃபெர்ரர் ஜேன்.
செயற்கை சூரிய மறைப்பு(Artificial Eclipse)
புரோபா-3(Proba-3) எனும் விண் வெளி ஆய்வை ஐரோப்பிய விண் வெளி முகமை (ESA) செப்டம்பர் மாதம் ஏவ உள்ளது. இந்த திட்டம் 14 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்தது. நிலவு சூரியனை மறைக் கும்போது ஏற்படும் சூரிய மறைப்பு போன்ற ஒன்றை செயற்கையாக உரு வாக்கி கொரோனா எனப்படும் சூரி யனின் வெளிப்பகுதியிலுள்ள சிறிய மங்கலான அம்சங்களை கண்டறி வதே இந்த திட்டம். இதற்காக இரண்டு சிறிய செயற்கைகோள்கள் ஒன்றாக ஏவப் பட்டு பின் விண்வெளியில் பிரிந்து செல்லும். ஒன்றுக்கொன்று இணை யாக பூமியை சுற்றிவரும் இவற்றிற்கு இடையில் 144 மீட்டர்கள் தூரம் இருக்கும். ஒரு செயற்கைகோள் சூரி யனின் பிரகாசமான பகுதியை மற் றொன்றிற்கு மறைக்கும். ‘இது தரை யிலிருந்து எந்தவித ஆணைகளும் இல்லாமல் தானாகவே நடைபெறும்’ என்கிறது அந்த முகமை. சூரிய னின் கொரோனா பகுதி மிகவும் மங்கி யதாகும். எனவே இயற்கையான சூரிய மறைப்பின் போது மட்டுமே தெரி கிறது. ஆனால் அப்போது அவை சிறிது நேரத்திற்கு மட்டுமே நீடிக்கும்; மேலும் அவை அடிக்கடி நிகழ்வதில்லை. இயற்கையான மறைப்பின் போது சூரியனுக்கு மிக அருகில் பார்க்க முடியும். இதில் அவ்வாறு இயலாது. எனினும் இந்த சோதனை யின்போது சூரிய மறைப்பு மணிக்க ணக்கில் இருக்கும் என்பதால் 5-10 நிமி டங்களே நீடிக்கும் இயற்கை சூரிய மறைப்பை விட சிறப்பான புகைப் படங்கள் கிடைக்கும். இதை ஏவு வதற்கு ஐரோப்பிய முகமையிடம் தற்போது ராக்கெட்டுகள் இல்லை. ஆனால் கவலைப்பட வேண்டாம். இந்திய நாட்டின் ஸ்ரீஹரிகோட்டாவிலி ருந்து இது ஏவப்படப் போகிறது.