நுரையீரல் புற்று நோய்க்கு காற்று மாசு காரணம்!
இந்தியாவில் நுரையீரல் புற்று நோய் அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் அதிகமாகி வருகிறது. தொடர்ந்து காற்று மாசு சூழலில் வாழ்வதே இதற்குக் காரணம் என நம்பப்படுகிறது. இதில் ஒரு அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தி என்னவென்றால் இந்த நோயாளிகளில் பெரும்பாலோனோர் புகை பிடிப்பவர்கள் அல்லர். டாட்டா மெமோரியல் மருத்துவமனை நிபுணர்களை உள்ள டக்கிய ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் பல முக்கிய விசயங்கள் வெளிவந்துள்ளன. மேலை நாடு களில் நுரையீரல் புற்று நோய் கண்டு பிடிக்கப்படுவது 54 வயதிலிருந்து 70 வயதிற்குள்; ஆனால் இந்தியாவில் இதற்கு பத்து வயது முன்னரே நோய் ஏற்படுகிறது என்று தெரிய வந்துள்ளது. இதற்கு இந்தியா விற்கும் மற்ற நாடுகளுக்கும் உள்ள சராசரி வயது வேறுபாடும் ஒரு காரணமாக இருக்கலாம். காற்று மாசு, மரபணு மாற்றங்கள் போன்ற பிராந்திய காரணிகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. ஆண் பெண் புற்று நோயாளி கள் விகிதத்தைப் பார்க்கும்போது, ஆண்கள் அதிகம் புகை யிலை பயன்படுத்துபவர்கள் என்பதும் தெரிகிறது. உலகத்தில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் 40இல் 37 தெற்கு ஆசியா வில் உள்ளது என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. பருவநிலை மாறுபாடு அதிகரித்துக் கொண்டே போகும்போது நுரையீரல் புற்று நோய் சுமையும் பெரிதாகும். ஏற்கனவே பொது சுகாதார சவால்களில் இந்த நோய் ஒரு கணிசமான பங்கு வகிக்கிறது. இந்த ஆய்வு லான்செட்டின் ‘இகிளினிக்கல் மருத்துவ ஜர்னல்’ இதழில் வெளிவந்துள்ளது.
யானைகளின் பாதுகாப்புக்கு செயற்கை நுண்ணறிவு?
யானைகள் ஒவ்வொரு வருடமும் தண்ணீர் மற்றும் உணவு தேடி வெவ்வேறு வாழ்விடங்களுக்கு இடம் பெயர்கின்றன. அவை செல்லும் வழி யானைத் தடம் (elephant corridor) என்ற ழைக்கப்படுகிறது. யானைகள் இடம் பெயரும்போது நூற்றுக்க ணக்கான மைல்கள் கடந்து செல்கின்றன. எனவே அவற்றின் குறுக்கே சாலைகள், இரயில் பாதைகள் குறுக்கிடுவது தவிர்க்க வியலாதது. ஆனால் ரயில் மோதலில் இறக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றன. இதற்கு ஒரு தீர்வாக செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் ‘குறுக்கீடு கண்டுபிடிப்பு அமைப்பு(intrusion detection system-IDS) என்பதை வட கிழக்கு ரயில்வே செயல்படுத்தியுள்ளது. தொலை தொடர்புக்காக ரயில்வே தண்டவாளங்களின் அடியில் புதைக் கப்பட்டுள்ள கண்ணாடி இழை வடங்களில் சென்சார்கள் பொருத்தப் பட்டுள்ளன. இவை அருகில் செல்லும் விலங்குகளின் காலடி ஓசை அதிர்வுகளை பதிவு செய்கின்றன. அவற்றின் அதிர்வு அலைகள், அதிர்வின் காலம் ஆகியவற்றை யானைகள் நடக்கும்போது ஏற்படும் அதிர்வுகளோடு ஒப்பிட்டு, தகவல்கள் ரயில் ஓட்டுனர்களுக்கு அனுப்பப்படுகின்றன. அவர் உடனே ரயிலின் வேகத்தை குறைத்து விடுவார். இந்த தகவல்கள் கட்டுப் பாட்டாளர், நிலைய அதிகாரி மற்றும் பல பொறுப்பாளர்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
சிறிய செடி! பெரிய மரபணு!
“சிறியோர் எல்லம் சிறியருமல்லர் பெரியோர் எல்லாம் பெரியோரும் அல்லர்” என்கிற வாக்கு மரபணு தொகுதி அறிவிய லில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மனிதனின் கைக்குள் அடங்கும் ஒரு பெரணிச் செடியின் மரபணு தொகுதி(Genome) மனித மர பணு தொகுதியை விட ஐம்பது மடங்கு பெரி யதாம். இதற்கு முன் அறியப்பட்ட பெரிய மரபணு தொகுதி ஜப்பான் நாட்டை சேர்ந்த பாரிஸ் ஜப்பானிக்கா எனும் பூவினுடைய தாம். இதைவிட இப்போது கண்டறியப் பட்டுள்ள பெரணியின் தொகுதி 7 மடங்கு பெரியதாம். பெரும்பாலான தாவரங்க ளின் மரபணு தொகுதி ஒப்பீட்டளவில் சிறி யவையே. சில தாவர வகைகள் மட்டும் விதி விலக்காக பெரும் தொகுதிகளை கொண் டுள்ளன. இவை எவ்வாறு படிநிலை வளர்ச்சி அடைந்தன, அந்த தாவரங்களில் தொகுதிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிவதில் பார்சிலோனாவை சேர்ந்த பரிணாம உயிரியலாளர் ஜாம பெலிஸர் ஆய்வு செய்தார். தென் பஸிஃபிக் கடலிலுள்ள நியூ கலிடோனியாவில் காணப் படும் ஃபோர்க் பெரணிச்செடிகளில் ஆய்வு கள் நடத்தினர். அதன் இலைகளிருந்து செல்களை பிரித்தெடுத்து அதன் நியூ கிளியசிலுள்ள மரபணுக்களில் ஒளிரும் வண்ணம் ஏற்றி சிறிய மரபணு தொகுதிகள் கொண்ட தாவரங்களுடன் ஒப்பிட்டனர். ஒரு குறிப்பிட்ட வகை பெரணி 160 பில்லி யன் நியூகிளியோ பேஸ்களைக் (டிஎன்ஏ யின் இரட்டைக் கால்களை இணைக்கும் படிகள்)கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இது எவ்வாறு பரிணாம வளர்ச்சியில் நிகழ்ந்தது என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும் என்கிறார் அவர். மரபணு தொகுதிகளை பயன்படுத்தி பல்லு யிர் சூழலை அட்டவணைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்த முடிவுகள் காட்டு வதாக பெலிஸர் கூறுகிறார். இந்த ஆய்வு மே 31, சயின்ஸ் இதழில் வெளிவந்துள்ளது.
பனிக்கட்டி ஏன் வழவழப்பாக இருக்கிறது?
பனிக்கட்டியின் மேற்பரப்பு ஏன் வழவழப்பாக இருக்கிறது என்பது விஞ்ஞானிகளை பல காலமாக ஆட்கொண்டிருந்த ஒரு கேள்வியாகும். 1850இல் மைக்கேல் ஃபாரடே, பனிக்கட்டியின் மேற்பரப்பில் ஒரு திரவ பூச்சு இருக்கலாம் என்று யோசித்ததிலிருந்து இதுவரை அது தெளிவாகவில்லை. இப்போது பீகிங் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இயற்பியலாளர் யிங் ஜியாங் மற்றும் அவரது குழுவினரும் அணு சக்தி நுண்நோக்கியை(atomic force microscope) பயன்படுத்தி ஆய்வு செய்துள்ளனர். -150 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் அதன் மேற்பரப்பு இரண்டு அடுக்குகளால் ஆனது என்று தெரிய வந்துள்ளது. சாதாரணமாக தண்ணீர் மூலக்கூறுகள் அறுகோண வடிவில் அடுக்கப்பட்டிருக்கும். இன்னொரு அடுக்கு வைரத்தில் உள்ளது போல் நாற்கர வடிவில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த இரண்டு அடுக்குகளும் சேரும் பகுதியில் கட்டமைப்பு குறைபாடாக உள்ளது. மேலும் ஒரே வரிசையில் உள்ள மூலக் கூறுகளும் சாதாரணமாக மேலும் கீழுமாக இருக்கும். ஆனால் சில பகுதிகளில் அவை ஒரே தளத்தில் இருப்பதும் அவற்றின் கட்டமைப்பு சிதைவிற்கு வழி வகுக்கின்றன. இவையெல்லாம் அதன் மேற்பரப்பிற்கு திரவ தன்மையை கொடுக்கிறதாம். இந்த ஆய்வு மே 22 ‘நேச்சர’’ இதழில் வந்துள்ளது.