science

img

அறிவியல் கதிர் - ரமணன்

நிலவில் உயிர்  பாதுகாப்புக் களஞ்சியம்! 

அருகி வரும் உயிரினங்களை பாதுகாப்பதற்காக ‘உயிரி பாதுகாப்புக்  களஞ்சியம்’ ஒன்றை நிலவில் அமைக்கலாம் என்று ஒரு ஆய்வு  கூறுகிறது. பூமியில் இந்த உயிரினங்கள் இயற்கைப் பேரழிவு, கால நிலை மாற்றம் மற்றும் புவிசார் அரசியல் மோதல்கள் ஆகியவற்றால் அழிந்து விடாமல் இருக்க, நிலவில் வைத்து பாதுகாக்கலாமாம். இந்த அபூர்வமான  தீர்வு சிமித்சோனியன் தேசிய பூங்கா மற்றும் உயிரியல் பாதுகாப்பு நிறு வன ஆய்வளார்களால் முன்மொழியப்பட்டுள்ளது. ‘பயோ சயின்ஸ்’ எனும்  இதழில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளிவந்துள்ளது. 163040 உயிர் இனங்களை  மதிப்பீடு செய்ததில் 45300 இனங்கள் அழியும் தறுவாயில் உள்ளன என்கிறது  பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியம்(IUCN). செல், திசு அல்லது ஒரு  உயிரி முழுவதையுமே மிக குறைவான வெப்பத்திற்கு குளிர்வித்து அவை அழி யாமல் இருக்கும் நிலையில் பாதுகாக்கும் முறை குளிர்பேணல் (Cryopreservation) எனப்படுகிறது. இந்த வெப்பநிலையில் உயிரின் எல்லா  இயக்கமும் செல்கள் இறப்பிற்குக் காரணமான உயிர் வேதி வினைகளும்  நிறுத்தப்படுகின்றன. நிலவின் துருவப் பகுதிகளுக்கு அருகிலுள்ள பகுதி களில் மிகவும் குளிர்ந்த வெப்ப நிலை (-371 ஃபாரன்ஹீட் அளவில்) இருப்ப தால் இவை திசுக்களை பாதுகாக்க உகந்தது. பூமியில் திசுக்களை பாது காப்பதை விட மிகக் குறைந்த ஆற்றலே இதற்கு தேவைப்படும். மனித  குறுக்கீடுகளும் இருக்காது. எதார்த்தத்தில், இந்த ‘நிலவுக் கருவூலம்’ நிறுவு வவதற்கு மிக நீண்ட காலம் ஆகும். விண்வெளிப் பயணத்தில் திசுக்களை  பத்திரமாக எடுத்து செல்வது, பன்னாட்டு ஒருங்கிணைப்பு, காஸ்மிக் கதிர்  விளைவுகள் ஆகிய பிரச்சினைகள் உள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள்.

சிம்பன்சிகள் பேசுமா?

மனித இனத்திற்கு மிகவும் நெருங்  கிய விலங்கினமான சிம்பன்சி கள் பேச்சுத் திறன் பெற்றிருக்க லாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்  துள்ளன என்கிறது ஒரு ஆய்வு. சிம்பன்சி களின் சில கருவூல படங்களை (archives)  நுணக்கமாக பரிசீலித்த ஒரு பன்னாட்டு அறிவியல் குழு, கடுமையான மற்றும் அற மற்ற சூழலில் அவை ‘மா மா’ என்ற  சொல்லை வெளிப்படுத்துவதாக கவனித்  துள்ளனர். இதற்கு முன், மனிதப் பேச்சு  குறித்த கியூப்பர்-ஜர்ஜென் எனும் கருது கோளின்படி, நமது மூளைப் பகுதியில் தாடை அசைவும் பேச்சுக் கட்டுப்பாடும் ஒன்றுக்கொன்று இணைந்திருப்பது குழந்தைகளின் மழலை போன்ற சிறு  சிறு சொற்கள் பேசுவதை சாத்தியமாக்கி யிருந்தது. அதுவே பின்னர் படிநிலை வளர்ச்சியில், வளர்ந்த மனிதர்கள் பேசும்  அர்த்தமுள்ள பேச்சு மாதிரியானது. சிம்பன்சிகளில் இந்த இணைப்பு இல்லாததால் அவைகளால் மனிதர்கள் போல் பேச இயல்வில்லை.  ஆனால் அண்மைக்கால ஆய்வுகள்  இந்த கருதுகோளை கேள்விக்குள்ளாகி யுள்ளன. ஒரு காணொளியில் அமெ ரிக்க ஃபுளோரிடாவிலுள்ள குரங்குகள் சரணாலயத்தில் ‘ஜானி’ எனும் சிம்பன்சி  எல்லோரையும் ‘மா மா’ என்றழைப்பது காணப்படுகிறது. இன்னொரு காணொலி யில் யூனிவர்சல் ஸ்டுடியோவில் 1962 செய்தி சுருள் ஒன்றில் ரெனட்டா எனும்  சிம்பன்சி அதன் காப்பாளரிடம் ‘மாமா’  என்று கூறுகிறது. இதை மெய்ப்பிக்கும் ஆன் லயன் சோதனையாக, பங்கேற் பாளர்கள் சிம்பன்சிகளின் பேச்சை கூர்ந்து கேட்ட்டனர். பெரும்பாலோனோர் அவை ‘மாமா’ என்று பேசுகின்றன என்  பதை ஏற்றுக்கொண்டனர். “இதிலிருந்து  பெறப்படுவது ,ஒன்று கியூப்பர்-ஜர்ஜென் முன்மொழிவில் கூறப்படும் மூளைப் பகுதி, பேச்சு திறனுக்கு முக்கியமானது அல்ல; அல்லது சிம்பன்சிகளும் அதைப்  பெற்றிருக்கின்றன என்கிறார் சுவீடன் நாட்டு தொழில்நுட்ப கழகத்தை சேர்ந்த வரும் ஆய்வின் முதன்மை ஆசிரியரு மான முனைவர் ஆக்செல் எக்ஸ்ட்ராம். 1947இல் கெய்த் மற்றும் கேத்ரைன் என்ப வர்கள் ‘விக்கி’ எனும் பெயரிடப்பட்ட சிம்பன்சியை குழந்தை போல் வளர்த்த னர். அது ‘மாமா’ ‘கப்’ ‘அப்’ போன்ற சிறிய  வார்த்தைகளை பேசும் திறன் பெற்றி ருந்தது என்பதுடன் இப்போதய ஆய்வு கள் ஒத்துப் போகின்றன.

மனப்பிறழ்வு நோய் கண்டறிய புதிய முறை

சிசோஃபெர்னியா எனும் மனப்பிறழ்வு நோய் மூளையில் எந்தப் பகுதியில் முதன்முதலாக உருவாகிறது என்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளதாக தெரிகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்ட 1124 நபர்களின் மூளை ஸ்கேனை ஆரோக்கியமான 1046 நபர்களின் ஸ்கேனுடன் ஒப்பிட்டு இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் கவனிக்கப்பட்டன. இந்த புதிய ஆய்வு முறை ‘மய்ய வரைபடம’’(epicenter mapping) எனப்படுகிறது. மூளையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்த நோய் உருவாகலாம் என்று இந்த தரவுகள் காட்டினாலும் மொழி மற்றும் உணர்ச்சிகள் தொடர்பான பகுதிகள் முக்கியமானவை எனத் தெரிகிறது. இந்த நோய் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு விதமாக வெளிப்படுகிறது. எனவே சிகிச்சை யாருக்கு பலனளிக்கும் என்பது சற்று கடினமானது. இந்த புதிய முறையின் மூலம் குறிப்பிட்ட சிகிச்சை யாருக்கு பலனளிக்கும் என்பதை அறிய உதவும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.