science

img

புதன் கிரகத்தில் வைரம் - விஞ்ஞானிகள் தகவல்

பூமிக்கு அருகே உள்ள புதன் கிரகத்தில் (Mercury) அதிக அளவில் வைரம் இருப்பதாக சீனா மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளனர் .
புதன் கிரகத்தின் மேற்பரப்பில் கார்பன், சிலிக்கா மற்றும் இரும்பு கலவை இருப்பதாகவும், அவற்றிற்கு அடியில் வைர அடுக்குகள் (14 கி.மீ | தடிமனில்) இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் அங்குள்ள வைரத்தை வெட்டி எடுக்க வாய்ப்பு இல்லை எனவும் சீனா மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த  தகவல்கள் 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ளன.