science

img

மாமல்லபுரம் அரூகே ரூமி - 1 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது

மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தை கடற்கரையிலிருந்து 3 சிறிய செயற்கைக்கோள்களைக் கொண்ட ரூமி - 1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த ரூமி - 1 ராக்கெட் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் இந்தியா என்ற நிறுவனத்தால் மிஷன் ரூமி 2024 என்ற திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட் ஆகும். 
3.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் வானில், 80 கி.மீ. உயரத்தில் பறக்கக்கூடிய திறன் கொண்டது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டால், ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி, பல முறை செயற்கைக்கோளை ஏவலாம். இதனால் செலவு மிச்சமாகும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.