சென்னை, ஏப்.25 - கொரோனா வைரஸ் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக் கிழமை ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்.29 இரவு 9 மணி வரை சென்னை, கோவை, மதுரை சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகர பொது மக்களுக்கு எவ்வித சிரமுமின்றி, வீடுகளைத் தேடி சென்று பால் மற்றும் பால் உபபொருட்கள் கிடைக்க, ஆவின் நிறுவனம் 24.04.2020 முதல் சுமோட் டோ, டிண்டோ போன்ற தனியார் நிறுவனங்களுடன் இணைந்த சேவையாற்ற ஒப்பந்தம் செய்துள்ளது.