2021 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் சொந்த ராக்கெட் மூலம் முதல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப இலக்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக சிவன் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் ஐ.ஐ.டி-யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோவின் தலைவர் சிவன் கலந்து கொண்டு பேசியுள்ளார். இவ்விழாவில் பேசிய சிவன், இந்திய விண்வெளித்துறையில் கடந்த அரை நூற்றாண்டாக முன்னேற்றங்கள் அடைந்து வருகிறோம். ஆனால் இந்தியாவில் பசி, பட்டினி, வறுமை, சுகாதாரம் என பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகிறது. இதற்கெல்லாம் தீர்வுகாண மாணவர்களாகிய நீங்கள் முன் வரவேண்டும் என்று பல அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்கினர்.
இதனை தொடர்ந்து பேசிய சிவன், விக்ரம் லேண்டரரின் முயற்சி திட்டமிட்டதைப்போல நடக்கவில்லை, இருந்தாலும் ”ககன்யான்” திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக்காட்டுவோம் என குறிப்பிட்டார். மேலும் 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் விண்வெளிக்கு, இந்தியாவின் சொந்த ராக்கெட் மூலம் மனிதரை அனுப்புவதே இஸ்ரோவின் பிரதான இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.