science

img

இரு செயற்கைக்கோள்களை இணைக்கும் பணி வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு

பி.எஸ்.எல்.வி சி60 மூலம் விண்ணில் ஏவப்பட்ட சேசர் மற்றும் டார்கெட் ஆகிய 2 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோவின் ஸ்பேட்எக்ஸ் திட்டத்தின் கீழ், பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட் மூலம் SDX01 (Chaser) மற்றும் SDX02 (Target) ஆகிய இரு செயற்கைக்கோள்கள் கடந்த டிசம்பர் 30-ஆம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த நிலையில், இரு செயற்கைக்கோள்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை முதல் 230 மீட்டாக குறைக்கப்பட்டு, பின்னர் 15 மீட்டரும், படிப்படியாக 3 மீட்டருக்கு குறைத்து கடந்த ஜனவரி 12-ஆம் தேதி இஸ்ரோ சோதனை நடத்தியது. 
இந்த நிலையில், இன்று 2 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அமெரிக்க, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து ஸ்பேஸ் டோக்கிங் முறையை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய 4ஆவது நாடாக இந்தியா உள்ளது.