1. நியாண்டர்தால் இனம் எப்படி அழிந்தது?
நியாண்டர்தால் மனிதர்கள் நமது தூரத்து பங்காளிகள் எனக் கருதப்படுகிறார்கள்.அவர்கள் 40000 வருடங்களுக்கு முன் திடீர் என மறைந்து விட்டனர்.இதற்கான காரணத்தை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிரியல் துறை பேராசிரியர் கிலி கிரீன்பாம்(Gili Greenbaum) மற்றும் அவரது குழுவினரும் கண்டறிந்துள்ளனர். ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் சில ஆயிரம் வருடங்களில் நவீன மனித இனம் சிக்கலான நோய் பரிமாற்றத்தின் மூலம் நியாண்டர்தால் மனித இனத்தை அழித்துவிட்டதாக அவர்களது கருதுகோள்(hypothesis) கூறுகிறது.இந்த அழிவு விரைவாக நடக்காமல் ஏன் மெதுவாக நடந்தது என்பதையும் அது விளக்குகிறது. தொல்லியல் ஆதாரங்களின்படி ஐரோப்பிய-ஆசியப் பகுதியில் வாழ்ந்த நியாண்டர்தால் மனித இனத்திற்கும் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒரு புதிய மனித இனத்திற்கும் இடையில் 130000 ஆண்டுகளுக்கு முன் தொடர்புகள் ஏற்பட்டது.இது லேவண்ட் எனப்படும் கிழக்கு மத்திய தரைக் கடல் பகுதியில் ஏற்பட்டது.

இந்த இரு இனங்களுகிடையில் இனக்கலப்பு ஏற்பட்டு நமது மூதாதையர்கள் நியாண்டர்தால் இனத்தை புறந்தள்ளிவிட்டனர். இந்த இனக்கலப்பில் பிறந்தவர்கள் இரண்டு இனத்தின் நோய் எதிர்ப்பு மரபணுக்களை பெற்றிந்திருப்பார்கள்.இது பரவி இரண்டு இனங்களிலும் நோய் சுமை அல்லது தொற்று நோய் விளைவுகள் குறையத் தொடங்கின. இறுதியில் ஒரு கட்டத்தில் நவீன மனித இனத்தவர்கள் போதுமான நோய் எதிர்ப்பு பெற்று லேவன்ட்டை தாண்டி நியாண்டர்தால் இனம் வசித்த உள்பகுதிக்குள்ளும் எந்தவித உடல் நலப் பிரச்சினையுமின்றி ஊடுருவியிருக்கும். இந்தக் கட்டத்தில் நவீன மனித இனம் பெற்றிருந்த நியாண்டர்தால் இனத்திடமிருந்ததைவிட மேலான ஆயுதங்கள் அல்லது மேம்பட்ட சமூகக் கட்டமைப்பு போன்ற பிற அனுகூலங்கள் முக்கிய பங்கு வகித்திருக்கும். ஒரு உடைப்பு ஏற்பட்டபின் நோய் சுமை பங்கு வகிப்பதில்லை;மற்ற காரணிகள் செயல்படத் தொடங்குகின்றன என்கிறார் கிரீன்பாம். வெப்ப மண்டலத்தில் நோய் சுமை மித வெப்ப மண்டலத்தை விட அதிகம்.நவீன மனித இனம் வெப்ப மண்டலத்திலிருந்து நியாண்டர்தால் மனிதர்கள் வசித்த மித வெப்ப மண்டலத்திற்கு சென்றனர். நவீன மனித இனம் நியாண்டர்தால் இனத்தை அழிப்பதற்குப் பதிலாக அவர்களால் ஏன் மனித இனம் அழியவில்லை என்பதற்கு இதைக் காரணமாக கூறுகிறார்கள் 15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் குடியேறி தாங்கள் எடுத்து சென்ற பயங்கரமான நோய்கள் மூலம் அங்கிருந்த பூர்வ குடிகளை முற்றிலும் அழித்ததை தங்களின் கருதுகோளுடன் ஒப்பிடலாம் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
(nature communications-phys.org 02/11/2019 கட்டுரையிலிருந்து)
2. புற்று நோய்க்கு புதிய வைரஸ் சிகிச்சை
எல்லாவிதமான புற்றுநோயையும் குணப்படுத்தும் என்று சொல்லப்படும் வைரஸ் ஒன்றை ஆஸ்திரேலியா நாட்டு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இது பசு அம்மைப்பாலிலிருந்து எடுக்கப்பட்டதாம். அடுத்த ஆண்டிலிருந்து மனிதர்களிடம் சோதனை செய்யப்படும். மார்புப் புற்று,நுரையீரல் புற்று,சிறுநீர்ப்பை,குடல் புற்று போன்ற நோயுள்ளவர்களை குறிப்பாக இலக்கு வைத்து இந்த சோதனை செய்யப்படும்.இந்த நோயாளிகளின் கட்டிகளுக்குள் வைரஸ் நேரடியாக செலுத்தப்படுமாம்.
3. முட்டை வடிவ ஐஸ்கட்டிகள்
பின்லாந்து கடற்கரை ஒன்றில் இணையர்கள் ஒருவர் ஆயிரக்கணக்கான முட்டை வடிவிலான ஐஸ் கட்டிகளை கண்டுள்ளனர்.இது சில குறிப்பிடத்தக்க நிலைமைகளில் மட்டுமே நடக்கின்ற நிகழ்வு என்கிறார்கள் நிபுணர்கள். அதாவது காற்றின் வெப்ப நிலை பூஜ்யத்திற்கு சற்று கீழேயும் நீரின் வெப்ப நிலை உறைநிலையிலும் இருக்கவேண்டும். கடற்கரை சற்று சரிவான தளத்தைக் கொண்டதாக இருக்கவேண்டும்.லேசான அலை ஏற்றமும் தேவைப்படும். இலையுதிர்காலமே இதற்கு ஏற்றது. இந்தக் கட்டிகள் முப்பது மீட்டர் தூரத்திற்கு பரவிக்கிடந்ததாகவும் அதில் பெரிய கட்டி கால் பந்து அளவுக்கு பெரியதாக இருந்ததாகவும் கூறுகிறார் இதைப் படம் எடுத்த ரிஸ்டோ மாட்டிலா.