science

img

மனிதர்களைக் குட்டையாக்கும் காலநிலை மாற்றம்

சிதம்பரம் இரவிச்சந்திரன்

காலநிலை மாற்றம் மனிதர்க ளின் உருவத்தை சுருங்கச் செய்யும் என்று புதிய ஆய்வுகள் கூறு கின்றன. சிறிய உருவம் கொண்ட பாலூட்டி கள் வெப்ப உயர்வை திறம்பட சமாளிக் கின்றன என்று எடின்பரோ பழங்கால மற்றும் புதைபடிவ ஆய்வாளர் கூறுகிறார். நாளுக்குநாள் உயர்ந்துவரும் புவி வெப்பத்தினால் இதே நிலை மனிதர் களுக்கும் ஏற்படும். முன்பு காலநிலை மாற்றம் நிகழ்ந்த காலங்களில் மற்ற பாலூட்டிகள் பதில் வினை புரிந்த மாதிரிகளை வைத்து ஆரா யும்போது மனிதர்களின் வருங்காலம் பற்றி அறியமுடியும் என்று எடின்பரோ பல்கலைக் கழக தொல் ஆய்வாளர் (Palaeontologist) பேராசிரியர் ஸ்டீவ் ப்ரூசட் (Prof Steve Prusatte) கூறுகிறார். இவ்வாறே குதிரைகளின் உருவ அளவு குறைந்தது. பூமியில் அதிதீவிர வெப்பநிலை 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் திடீர் அதிதீவிர வெப்ப உயர்வு காலத்தின்போது (Paleocene Eocene thermal maximum period) குதிரைகளுக்கு இந்த மாற்றம் சம்ப வித்தது. விஞ்ஞானிகளால் உறுதியாகக் கூற இயலாத காரணங்களால் ஏற்பட்ட  இந்நிகழ்வின்போது கார்பன் டை ஆக்சைடின் அளவு மிதமிஞ்சி அதிகரித்த தால் பூமியின் வெப்பநிலை 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது.

பூமியின் வரலாற்றில்
இது குறைந்தது ஒரு இலட்சம் ஆண்டு களுக்குநிலவியதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இக்காலகட்டத்தில் மடிந்த உயிரினங்களின் புதைபடிவங்கள் இன்று ஏராளமாக உள்ளன. இதுவே பூமி தோன்றியதில் இருந்து ஏற்பட்ட மிக சமீபத்திய புவி வெப்ப உயர்வு நிகழ்வு என்று ஸ்டீவ் கூறுகிறார். இது பற்றி “பாலூட்டிகளின் எழுச்சியும் ஆட்சியும்” (The Rise and Reign of the mammals) என்ற தன் நூலில் அவர் விரிவாக எழுதியுள்ளார்.

பெர்க்மேன் விதி
பெர்க்மேன் விதியின்படி (Bergmann’s rule) குளிர்ப் பிரதேசங் களில் வாழும் பாலூட்டிகளை விட வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழ்பவற்றின் உரு வமும் வடிவமும் சிரிதாகவே உள்ளன. பெர்க்மேன் விதி என்பது அனுபவப்பொது மைப்படுத்தல் கோட்பாட்டின்படி வெப்ப இரத்த உயிரினங்களின் உடல் அளவைப் பற்றி கூறுவது. இதன்படி குளிர்ப்பகுதிக ளில் வாழும் விலங்குகள் வெப்பப்பகுதி களில் வாழ்பவற்றை விட பெரிய உடலமைப்புடன் காணப்படுகின்றன. இதற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும் கன அளவை விட சிறிய உடல் மேற்பரப்புடைய உயிரினங்கள் உயர் வெப்பத்தை அதிக அளவு தாங்கக்கூடியவையாக உள்ளன என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் சூழலில் நிலவும் உயர் வெப்பத்தை இவற்றால் அதிக பரப்பிற்கு பரவச் செய்யமுடியும். புகழ்பெற்ற கார்டியன் செய்தி நிறு வனத்டிடம் பேசும்போது பேரா ஸ்டீவ் கால நிலை மாற்றத்தின்போது பாலூட்டிகள் இத்தகைய மாற்றத்தை மேற்கொள்கின் றன என்று கூறியுள்ளார். ஒவ்வொரு பாலூட்டியும் இத்தகைய மாற்றத்திற்கு ஆளாகவேண்டும் என்று அவசியமில்லை. எதிர்பாராமல் வெப்பநிலை அதிகரிக்கும் போது பாலூட்டிகள் வெப்பத்தைத் தாங்கு வதற்காகப் பின்பற்றும் ஒரு பொதுவான நடைமுறை இது என்று கருதப்படுகிறது. இது ஒரு பெரும் வினாவை எழுப்புகிறது.

மனிதர்கள் குட்டையாவார்களா?
மனிதர்களும் இதேபோல் குட்டை யாகிவிடுவார்களா? குள்ளமாகிவிடுவார் களா? நிச்சயமாக இவ்வாறு நிகழ வாய்ப்பு உண்டு என்று ஸ்டீவ் நம்புகிறார். வளங்கள் போதுமான அளவிற்கு கிடைக்காத காலத்தில் மனிதர்கள் வடிவத்தில் சுருங்கி விடுவர் என்று இந்தோனேஷியா ப்ளோரஸ் (Flores) என்னும் தீவில் முன்பொரு  காலத்தில் வாழ்ந்த ஹோமோப்ளாசியன் ஸிஸ் (homo floresiensis) அல்லது குட்டை (hobbit) மனிதர்களை எடுத்துக் காட்டாகக் கொண்டு அவர் கூறுகிறார். சமீபத்தில் கடந்த பல மில்லியன் ஆண்டு கால மானுட எச்சங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் உடல் அளவுகளை நிர்ணயிப்பதில் வெப்பநிலை முக்கியப்பங்கு வகிக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். வட ஐரோப்பா மற்றும் ஸ்காண்டிநேவியன் பகுதிகளில் நிலவிய வெப்பம் மிகுந்த சூழ்நிலையே செங்கரடிகளின் இன்றுள்ள உடல் அளவை தீர்மானித்ததில் முக்கியப்பங்கு வகித்தது என்று கூறுகின்றனர். என்றாலும் இதை எல்லா நிபுணர்களும் ஏற்கவில்லை. லண்டன் இயற்கை வர லாறு அருங்காட்சியகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஏட்ரியன் லிஸ்ட்டர் (Prof Adrian Lister) “வெப்பநிலை அதிக மாகும்போது உணவு மற்றும் வளங்கள்  கிடைப்பதைப் பொறுத்தும் பாலூட்டிக ளின் உடல் அளவு நிர்ணயிக்கப்படலாம்” என்று கூறுகிறார். இயற்கைத் தேர்வால் நாம் கட்டுப் படுத்தப்படவில்லை. இவ்வாறு நிகழ்ந்தால் ஏராளமானவர்கள் இனப்பெருக்கம் செய்யும் முன் புவி வெப்ப உயர்வினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்திருப்பர்” என்கிறார் அவர். இவ்வாறு நிகழவில்லை. நாம் உடைகளை உடுத்திக்கொள்கிறோம். குளிராக இருந்தால் வெப்பப்படுத்து கிறோம். வெப்பமாக இருந்தால் குளிர்பத னத்தைப் பயன்படுத்துகிறோம் என்று லிஸ்டர் கருதுகிறார்.  மற்ற உயிரினங்களை விட மனிதர்கள் மகத்தானவர்கள். ஆனால் மற்றவை மனிதர் கள் இன்றி இந்த பூமியில் நிம்மதியாக வாழும். ஆனால் மனிதர்களால் முடியுமா? உண்மையில் நானும் நீங்களும் ஒரு காண்டாமிருகமாக ஒரு யானையாக ஒரு சிங்கமாக ஒரு வாத்தழகியாக (platpus) இருந்தால் ஒரு கங்காருவாக இருந்தால் எதை விரும்புவோம்? மனிதர்கள் இல்லாத ஒரு பூமியையே! ஆனால் அவ்வாறு உறுதியாக நிகழப்போவதில்லை.