science

img

வானில் தோன்றிய புதிய ஒளிப்பட்டைகள்

வானில் தோன்றிய புதிய ஒளிப்பட்டைகள் பூமியில் பிரதானமாக வட தென் துருவங்களில் காணப்  படும் ஒளிப் பட்டைகளை அரோரா என்றழைக்கிறார்கள். அண்மையில் பொழுது போக்கு (amateur)விண்வெளியாளர் ஆலென்டையர் இரு வெவ் வேறு வண்ண அரோராக்கள் ஒன்றாக தோன்றிய காட்சியை படமெடுத்துள்ளார். இதன்  பின்னாலுள்ள அறிவியலை ஆய்வாளர்கள் விளக்கியுள் ளார்கள்.  இந்த காணொலியில் அவை தர்பூசணிப் பழம் போல காட்சியளிக்கிறது. சூரியக் காற்று பூமியின் காந்த மண்ட லத்திலுள்ள புரோட்டான்களை ஆற்றல் படுத்தும் போது பச்சை நிற அரோரா தோன்றும். சிவப்பு  நிற அரோராக்களும் இதற்கு முன் அறியப்பட்டதே.இதற்கு  பல விளக்கங்கள் கொடுக்கப் படுகிறது. பூமியின் காந்த மண்ட லம் காற்று மண்டலத்தை சூடு படுத்துவதால் சிவப்புநிற அரோராக்கள் தோன்றுகின்றன என் பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால் பச்சையும் சிவப்பும் சேர்ந்து தோன்றுவது விளக்கப்படவில்லை. செயற்கைக் கோள் தரவுகள், ஆலென்டையரின் பிம்பம் , அதைப் போன்ற மற்ற ஒளிப்பதிவாளர்கள் படம் பிடித்தவை ஆகியவற்றைக் கொண்டு இந்த அரோரா தோன்றியதை பாஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டோஷிநிஷி முராவின் குழுவினர் விளக்கியுள்ளனர். சூரியக்காற்றில் புரோட்டான் மழை பொழிவது போல எலெக்ட்ரான் மழையும் பொழிகிறது. அவை புரோட்டான்களை விட ஆற்றல் குறைவாக கொண்டிருப்பதால் சிவப்பு நிறமாக தெரிகின்றன. எலெக்ட்ரான் மழை மட்டுமே சிவப்பு அரோராக்கள் தோன்ற  காரணமாக இருக்காது என்கிறார் பெர்கிளியிலுள்ள கலி போர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிரையன் ஹார்டிங். ஆனாலும் இந்த ஆய்வு முடிவுகள் ஆர்வமூட்டுபவை. ஏனெ னில் அரோரா நிகழ்வு இதுவரை கருதப்பட்டது வந்தது போல் அவ்வளவு எளிமையானது அல்ல என்கிறார் அவர். பொழுது போக்கு விண்வெளியாளர்கள் உதவி இல்லாமல் இந்த கண்டுபிடிப்பு சாத்தியமாகியிருக்காது என்கிறார் டோஷி நிஷிமுரா. அசாதாரணமான புகைப்படங்களை அவர்கள் எடுக்க எடுக்க நம் அறிந்திராத பல விஷயங்களை அவர்கள் வெளிக் கொண்டு வருகிறார்கள்.

;