2023ஆம் ஆண்டின் உலக மனித இயந்திர மாநாடு கடந்த 16 அன்று பெய்ஜிங்கில் துவங்கி ஞாயிறு வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கருத்தரங்கு, உலக மனித இயந்திரப் பொருட்காட்சி, உலக மனித இயந்திரப் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. திறப்பு மற்றும் கூட்டுக் கட்டுமானம், கல்வி வழிகாட்டல், தொழில் துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கு மாநாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கருத்தரங்கில், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், மூத்த அறிஞர்கள், சீனா மற்றும் வெளிநாடுகளின் புகழ்பெற்ற நிபுணர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட 320க்கும் மேலானோர் பங்கெடுத்துள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு முன்னெடுப்புகள் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்படுகிறது. மேலும், சீனா மற்றும் வெளிநாடுகளின் 160 மனித இயந்திர நிறுவனங்கள் சுமார் 600 உற்பத்திப் பொருட்களுடன் இம்மாநாட்டுக்கான பொருட்காட்சியில் கலந்து கொண்டுள்ளன. அவற்றின் 60 புதிய உற்பத்திப் பொருட்கள் உலகளவில் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளன. மனித இயந்திரப் பொருட் காட்சியில் மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் பெண் இயந்தி ரம், பந்து விளையாடும் இயந் திரம், நடமாடும் நாய்க்குட்டி, ஆப்பிள் அறுவடை செய்யும் இயந்திரம் உட்பட பல வகை யான இயந்திரங்கள் இடம் பெற்றுள்ளதை பொது மக்களும் அறிவியல் ஆர் வலர்களும் செய்தியாளர் களும் வியப்புடன் பார்வை யுற்றடனர்.