politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- தொழிற்துறைக்கு புதிய சலுகைகள்
ச.சா - முதலாளிகளுக்கா..??
*****
மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் :- பட்ஜெட் இலக்குகளை எட்டி விடுவோம்.
ச.சா - வருஷத்துக்கு 2 கோடி பேருக்கு வேலை குடுத்தது மாதிரியா..??
*****
உச்சநீதிமன்றம் :- புதுச்சேரி அரசு தனது முடிவுகளை அமல்படுத்தலாம்.
ச.சா - புதுச்சேரி அரசை இயங்க விடாதீங்கன்னு கிரண்பேடியும், மத்திய அரசும் வழக்கு போடுறது அநியாயமாச்சே..?
*****
பிரதமர் மோடி : ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதில் கவனம் செலுத்துங்கள்.
ச.சா - உத்தரப்பிரதேசத்துலயும், பீகார்லயும் உங்க அரசு குழந்தைகளையே ஒழிச்சுருவாங்க போலருக்கே..??

;