politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு :- சர்வதேசத் தரத்தில் ஒரு பல்கலைக்கழகம் கூட இந்தியாவில் இல்லை.
ச.சா - ஜவகர்லால் நேரு மாதிரி தரமான பல்கலைக்கழகத்தக் கூட ஆட்சில இருக்குறவங்க சீர்குலைச்சுர்றாங்களே..??
*****
மத்திய அரசு :- 2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும்.
ச.சா - எந்த நேரத்துல என்ன சொல்வாங்களோனு இருக்குற ஆட்சிங்குறதுனால இப்புடி ஒரு அறிவிப்பு தேவைப்படுது..!!
*****
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:- தொழில் முதலீடுகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத்தயார்.
ச.சா - நீங்கதான் சொல்லிக்குறீங்க... முதலீடு வரலையே..?!?
*****
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி :- கர்நாடகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும்.
ச.சா - கட்சி தாவுனவங்களுக்கு உதவி பண்ணனுமோ...?!?

;