politics

img

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் மக்கள் அகதிகள் போல் வாழ்கின்றனர்

செங்கல்பட்டு, மே 19-தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் குடிதண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளை யாரிடம் தெரி விப்பது எனத் தெரியாமல் மக்கள் அகதிகளைப் போல் வாழ்கின்றனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். செங்கல்பட்டில் ஞாயிறன்று (மே 19) செய்தியாளர்களிடம் அவர்கூறியது வருமாறு:

குடிநீர் பற்றாக்குறை

தமிழகத்தில் குடிதண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. உள்ளாட்சித் தேர்தல்நடந்திருந்தால் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்றி ருப்பார்கள். மாற்று ஏற்பாடுகள் செய்திருப்பார்கள். ஏராளமான பிரச்சனைகளை யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் தமிழக மக்கள் அகதிகள் போல் திரி கின்றனர். தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து மாநில அரசு கவலைப்படவில்லை. இந்த வறட்சியைப் பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் நீர்நிலை களை சீர்படுத்தலாம். ஆனால் எதற்கெடுத்தாலும் தேர்தலைக் காரணம் காட்டுகின்றனர். அதே போன்று டெல்டா மாவட்டத்தில் காவேரியில் குடிக்கத் தண்ணீர் வருமா என எதிர்பார்க்கும் நேரத்தில் விவசாய நிலத்தில் கெயில் குழாய் பதிக்கிறது. இப்படி மக்களைப் போட்டுப் பந்தாடும் வேலையை மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன.காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் பன்னாட்டு உள்நாட்டுத் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக மாறிவிட்டது. இங்குப் பணி செய்திடும் தொழி லாளர்கள் குறித்து அரசுக்கு சிறிதும் அக்கறை இல்லை. தொழிற்சங்கம் வைத்தாலே பணி நீக்கம் என்பது பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் தொழிற்சாலையில் சாதாரண நடைமுறையாக மாறிவிட்டது. அப்படியானால் தொழிற்சங்க சட்டம்எல்லாம் எதற்கு என்ற கேள்வி எழுகிறது. 

நீதிமன்றமும் உத்தரவும்

`ஹூண்டாய் கார் தொழிற் சாலைக்கு உதிரிபாகம் தயாரிக்கும் சோவல் தொழிற்சாலை அவாசின்என்ற நிறுவனத்திற்குத் தர வேண்டிய பணத்திற்காக அவாசின் நிறுவனம் நீதிமன்ற உத்தரவுடன் சோவல் நிறுவனத்தில் உள்ள இயந்திரங்களை எடுக்க வந்தபோது சிஐடியு மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் அங்குள்ள தொழி லாளர்கள் வாழ்வாதாரம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்காக நீதிமன்றம் முத்துக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. “இயந்திரங்களை எடுத்துச் செல்லாதீர்கள், வழக்கில் எங்க ளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியது குற்றமா? இயந்திரங் களை எடுத்துச் சென்றுவிட்டால் தொழிலாளர்களையும் தொழி லாளர்கள் குடும்பத்தையும் யார் காப்பாற்றுவது? இதுபோன்ற பிரச்சனைகளில் நீதிமன்றம், அரசு, காவல்துறை பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாகச் செயல்படவேண்டும்.

தமிழக மாணவர்கள் நிலை

அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியாத நிலை தமிழகமாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கல்வித் தரம் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு நிறுவனங்களில் உள்ள பணியிடங்களை நிரப்பு வதில் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கின்ற விதிமுறைகளை மாற்ற வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். அதே போன்று அகில இந்தியப் போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் போதிய பயிற்சிகள் தரவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.மோகனன், சி.சங்கர், செங்கல்பட்டு பகுதி செயலாளர் கே.வேலன் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.வி.சிவக்குமார். வி.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


;