politics

img

கேள்வி நேரத்திலிருந்து...

தாலுகா உருவாக்கம் சுமையல்ல!

“தங்கள் தொகுதியில் புதிதாக வட்டங்களை உருவாக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் பலரும் தொடர்ந்து கோரிக்கை  வைத்து வருகிறார்கள். கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது அதிக எண்ணிக்கையில் வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சுதந்திர இந்தியாவில் 13 மாவட்டங்கள் தான் இருந்தன. தற்போது  மாவட்டங்களின் எண்ணிக்கை 37. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 9 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கிய இந்த அரசுக்கு வட்டங்களை பிரிப்பது ஒன்றும் சுமையல்ல. விரைவில் இதற்கான பணிகள் நடைபெறும் என்று தென்காசி தொகுதி அதிமுக உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் கேள்விக்கு வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் பதில் அளித்தார்.

சீர்காழிக்கு மணி மண்டபம்

தமிழிசை பாடகர் சீர்காழி கோவிந்தராஜனுக்கு புகழ் சேர்க்கும்  வகையில் சீர்காழியில் மணி மண்டபம் அமைத்து கொடுப்பதுடன் அவருக்கு அரசு சார்பில் விழா எடுக்க அரசு முன்வருமா? என  அதிமுக உறுப்பினர் பாரதி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த  கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியன்,“ சீர்காழி கோவிந்தராஜனுக்கு மணி மண்டபம் அமைத்து விழா எடுப்பது குறித்து செய்தித்துறையுடன் இணைந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

செங்கோட்டை மருத்துவமனை தரம் உயருமா ?

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்  பட்ட செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை  அரங்கம், அவசரப் பிரிவு மையம், பெண்களுக்கு தனிப் பிரிவு, பிணவறை வசதிகள் செய்து கொடுத்து தரம் உயர்த்தப்படுமா? என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர் கே.ஏ.எம்.  முஹம்மது அபூபக்கர் வினவினார். இதற்கு பதில் அளித்த சுகாதா ரத்துறை அமைச்சர்,“ செங்கோட்டைக்கு மிக அருகாமையில் இருக்கும் தென்காசி மருத்துவமனையில் அனைத்து வசதிகளும்  உள்ளது. இருந்தாலும் உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்ப டும் என்றார்.

ஒன்றியங்கள் பிரிப்பு நிறுத்தம் ஏன்?

ஊராட்சி ஒன்றியங்கள் பிரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,“பேரூராட்சி தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதால் ஊராட்சிகள் இரண்டாக  பிரிக்கக் கூடிய பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் நகராட்சியை  இரண்டாக பிரிப்பது ஊராட்சியை இரண்டாக பிரிப்பது உள்ளிட்ட  கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்க ளின் கோரிக்கை வந்துள்ளது இவை குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” என்றும் தெரிவித்தார்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் ‘நாய் கடிக்கு’ மருந்து

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாள்  ஒன்றுக்கு சுமார் 8 லட்சம் நோயாளிகள் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  நாய் கடிக்கு அரசு வட்டார மருத்துவமனைகள் மட்டுமின்றி அனைத்து  ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஊசி போடப்படுகிறது. தேவை யான அளவுக்கு இருப்பும் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு நபராக இருந்தாலும் நாய் கடிக்கான தடுப்பு ஊசி போட வேண்டும் என்று அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் அறி வுறுத்தப்பட்டுள்ளது. எங்கேயாவது தவறு நடந்தாலும் சரி செய்யப்படும் என்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னத்தூர்  சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் கு. பிச்சாண்டி எழுப்பிய வினாவுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் தெரிவித்தார்.


 

;