politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி:- குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப் பெற மாட்டோம்.
ச.சா - ஆனா, உங்களுக்குக் குடுத்த ஆதரவ மக்கள் திரும்பப் பெற ஆரம்பிச்சுட்டாங்களே.??
 

இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத்:- ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மீகக்கூட்டணி அமைப்போம்.
ச.சா - அவர சாமியாராக்கப் போறீங்களா..??
 

அமெரிக்க வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஆலிஸ் வெல்ஸ்:- இந்திய-அமெரிக்க உறவுகள் உறுதியானவை.
ச.சா -நீங்க சொல்றதுக்கு இந்தியா தலையாட்றவரைக்கும்.. அப்படித்தான..!!??
 

துணை குடியரசுத்தலைவர் வெங்கய்ய நாயுடு:- கருத்து சுதந்திரத்தை நியாயமான முறையில் பயன்படுத்த வேண்டும்.
ச.சா - தில்லி  தோல்விக்குக் காரணமான வெறுப்புப் பேச்சுக்கள சொல்றாரோ..??

;