politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி :- பாகிஸ்தானியர் அனைவருக்கும் குடியுரிமை வழங்குவோம் என்று எதிர்க்கட்சிகள் அறிவிக்குமா?
ச.சா - சம்பந்தமில்லாமப் பேசுறாரே.. இலங்கைத் தமிழர்கள் பாகிஸ்தானியர்களா..??
 

மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் :- மேற்கு வங்க சட்டமன்றத்துக்கு தனித்துவமான கலாச்சாரமும், வரலாறும் உள்ளது.
ச.சா - உண்மைதான்.. அது இடதுசாரிகளால கிடைச்சதுங்குறத ஏன் சொல்ல மாட்டேங்குறீங்க..?
 

துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு :- குடியுரிமை சட்டம் என்பது எந்த மதத்தினரின் குடியுரிமையையும் பறிக்கும் நோக்கம் கொண்டதல்ல.
ச.சா - நடைமுறைல அப்புடித்தான இருக்கு..!!
 

மத்திய உள்துறை :- ஜாமியா பல்கலை. மாணவர்கள் மீது காவல்துறையினர் சுடவில்லை.
ச.சா - அப்போ சுட்டது யாரு.. காவல்துறை உடைல இருந்த பாஜக குண்டர்களா..??

;