tamilnadu

img

தமிழ் வம்சாவளி தொழிலாளர்களுக்கு வீடும் நிலமும் வழங்கி பாதுகாக்கும் கேரள அரசு - எஸ்.ஜெயமோகன்

குடியுரிமை தொடர்பாக பெரும் போராட்டங்கள் நடந்துவரும் காலகட்டம் இது. 50 ஆண்டு களுக்கு முன்பு, இலங்கையிலிருந்து ‘மீள் குடியமர்த்தப்பட்ட’ தமிழ் வம்சாவளியினரான தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடும், நிலமும் வழங்கி அவர்களை பாதுகாப்பதில் கேரளம் நாட்டிற்கே முன்மாதிரியாகி வழிகாட்டியுள்ளது.   இந்தியாவும் இலங்கையும் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கீழ் இருந்த காலத்தில் இந்தியாவிலிருந்து தமிழ் வம்சாவளியினரை தோட்டத் தொழிலாளர்களாக இலங்கைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் இலங்கையில் நிரந்தரமாக தங்கி விட்டனர். இனக்கலவரம் ஏற்பட்டபோது தமிழ் வம்சாவளியினர் தாக்கப்பட்டனர். இறுதியாக இந்தியாவும் இலங்கையும் செய்துகொண்ட ஒப்பந்த அடிப்படையில் தமிழ் வம்சாவளியினர் இந்தியாவுக்கு திரும்பி அழைத்து வரப்பட்டனர்.  

திரும்பி வந்தவர்கள் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வேலையும் வசிப்பிடமும் வழங்கி பாதுகாக்கப்பட்டனர். இந்தியாவின் பல பகுதிகளிலும் வசிக்கும் இவர்கள் இன்றளவும் துயரங்களையே அனுபவித்து வருகின்றனர். ஆனால், கேரள மாநிலம் கொல்லத்தில் குடியமர்த்தப்பட்ட 1400 குடும்பங்கள் திருப்தியுடன் வாழ்ந்து வருகின்றன. தற்போது இவர்களது எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் வேலை உட்பட வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு தற்போது அவர்களுக்கு வீடும் நிலமும் வழங்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஒரு அரசு ஐடிஐ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது நாட்டிற்கே முன்னுதாரணமாகும். புதனன்று (பிப்.26) இதற்கான கட்டுமான பணிகளுக்கு கேரள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டி.பி.ராமகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.  

மீள் குடியமர்த்தலின் பின்னணி

1964 இல் லால்பகதூர் சாஸ்திரி – சிறிமாவோ ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்திரா காந்தி – சிறிமா வோ ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கையி லிருந்து சுமார் ஆறு லட்சம் வம்சாவளியினரை இந்தியா வில் மீள் குடியமர்த்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு வடிவம் கொடுத்த பல்வேறு திட்டங்களில் மிகவும் வெற்றிகரமானது தோட்டத் தொழிலாளர்களாக அவர்களை குடியமர்த்தி யதாகும்.

ஆங்கில ஏகாதிபத்திய காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டவர்களின் அடுத்த தலைமுறையினரும், அங்குள்ள பல்வேறு தோட்டங்களில் வேலை செய்தவர்க ளில் மறு குடியமர்த்தப்பட்டவர்களும் பயனடையும் வகை யில் அந்த திட்டம் வரையறுக்கப் பட்டிருந்தது. தென் மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகம், கேரளத்தில் மாநில அரசுகளுக்கு சொந்தமாக ஏற்கனவே உள்ள தோட்டங்களில் அல்லது புதிய தோட்டங்களை ஏற்படுத்தி மறுகுடியமர்த்த முடிவு செய்யப்பட்டது. கர்நாடகத்தில் வன வளர்ச்சி கார்ப்பரேசன் தோட்டங்கள், கேரளத்தில் புனலூர் மறுவாழ்வு தோட்டம் லிமிடெட் போன்ற இடங்களில் இவர்க ளுக்கு வேலை வழங்கி அங்கேயே குடியமர்த்தப்பட்டனர்.  

புனலூர் மறுவாழ்வு தோட்டம் லிமிடெட், மறுகுடி யமர்த்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக துவக்கப்பட்டதாகும். இது மத்திய - மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த பொ துத்துறை நிறுவனமாகும். 1972இல் கேரள அரசும் மத்திய அரசும் இணைந்து இந்த திட்டத்திற்காக பத்தனாபுரம் தாலுகாவில் 2070 ஹெக்டேர் வனநிலம் வெட்டித் திருத்தி ரப்பர் தோட்டமாக மாற்றப்பட்டது. தோட்டத் தொழிலாளர்க ளாக மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டியவர்களை நியமித்து வாழ்வாதாரத்திற்கு வழி வகுக்கப்பட்டது.

மறுகுடியமர்த்தப்பட்ட அனைவரும் இலங்கையில் தோட்டப் பகுதியில் வேலை செய்தவர்கள் என்பதால் அவர்கள் குறுகிய காலத்தில் தங்களை புதிய சூழ்நிலையுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டனர். மதம், மொழி சார்ந்த பிரச்ச னைகளும் எழவில்லை. பெரும்பாலும் தமிழ் முறையிலான வழிபாட்டுத் தலங்களும், சிலைகளும், வழிபாட்டு முறையும் கொண்டுள்ளனர். தீபாவளி, பொங்கல் முக்கிய பண்டிகைகள்.

தமிழ் வழிப் பள்ளிகள்

புனலூர் நிறுவனத்தின் குளத்துப்புழா தோட்டத்தில் ஒரு அரசு தமிழ் வழி உயர்நிலைப்பள்ளியும், ஆயிர நல்லூர் தோட்டத்தில் தமிழ் வழி துவக்கப்பள்ளியும் உள்ளன. இவர்க ளிடையே உயர்கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. புதிய தலைமுறையில் உயர்கல்வி பெற்றவர்கள் ஏராள மானோர் உள்ளனர். பெரும்பாலானவர்கள் உயர்கல்விக் காக தமிழ்நாட்டுக்கு செல்கின்றனர். இங்குள்ள குழந்தைகளின் கல்வியில் தோட்ட நிர்வாகம் அதிக கவனம் செலுத்துகிறது.

அவர்கள் மிகவும் எளிமையான உணவு முறையை கொண்டவர்கள். உணவில் பெரும்பாலானவை தமிழக பாணியில் உள்ளன. காலனிகள் பொதுவாக வன்முறை யற்ற, அமைதியானவை. வெளி உலக தொடர்புகள் அதிகம் இல்லாதவை என்றே இவற்றை கூறலாம். பெரும்பாலான குடும்பங்களுக்கு நிலம் அல்லது வீடு இல்லை. மக்கள் தங்கள் வரையறுக்கப்பட்ட வருமானத்தை மிகப் பெரிய குடும்பத்திற்கு செலவழித்த பின் நிலம் வாங்க முடியாது. எனவே, இந்த தொழிலா ளர்கள் சேவையை விட்டு வெளியேறிய பிறகும் குடி யிருப்பிலேயே வசிக்கிறார்கள். சொந்த நிலத்தை வாங்கிய சில தொழிலாளர்களிடம்கூட வீடு கட்டும் வசதி இல்லை. இந்த பிரச்சனையை தீர்ப்பதில் தொழிலாளர் நலத்துறை சிறப்பு கவனம் செலுத்தியதுடன், கேரள அரசின் நிதியுடன் தொழிலாளர் துறையின் கீழ் வீடு கட்ட கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு அனுமதி அளித்தது.

மாறுபட்ட வாழ்க்கை முறையும், தங்களுக்கே உரிய பழக்க வழக்கங்களும் கொண்ட இவர்களின் பாரம்பரியமான தொழிலை நம்பியே இந்த சமூகம் உள்ளது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வதும், குறைந்துவரும் வேலை வாய்ப்புகளும் எதிர்காலத்தில் ஒரு பெரும் சிக்கலை இந்த சமூகத்திற்கு ஏற்படுத்தும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே இத் தொழிலாளர்களின் சமூக, கல்வி மற்றும் பொரு ளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வது அவசியம். இந்த அரசின் பல்வேறு திட்டங்களும் பயனுள்ள தலையீடு களும் புனர்வாழ்வளிக்கப்பட்ட இலங்கை மீள்குடியேற்ற குடும்பங்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற் றத்திற்கு உதவுகின்றன.

கட்டுரையாளர்: தோட்டம் தொழிலாளர் சங்க நிர்வாகி மற்றும்  கேரள மாநில முந்திரி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர்  -தேசாபிமானியிலிருந்து தமிழில்: சி.முருகேசன்