politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

நேற்றைய தினம் ஒரு பத்திரிகை செய்தி. மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசுத்துறைகளில் 32 ஆயிரம் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 32 லட்சம் விண்ணப்பங்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. இதில் கால்நடை துறையில் மட்டும் 729 பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருக்கிறது. அதற்கு மட்டும் 3.3 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். அதாவது ஒரு பணியிடத்திற்கு 452 பேர் போட்டியிடுகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, உங்களது ஆட்சியின் லட்சணம் இதுதான். சமூக நல்லிணக்கத்தை நிர்மூலமாக்கவும் சமூகத்தின் இயல்பு வாழ்வில் இடைவிடாமல் விஷத்தைச் செலுத்தவும், உங்களது கட்சியினர் மிகத்தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களால் எப்படி வேலைவாய்ப்புகளை உருப்படியாக உருவாக்க முடியும்? எப்படி ஒரு நல்ல சூழலை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சியை உருவாக்க முடியும்? உங்களது ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. ஜிஎஸ்டியால் மக்களை கசக்கிப் பிழியும் உங்களால் நேரடி வரி வருவாயைக் கூட உத்தரவாதப்படுத்த முடியவில்லை. நேரடி வரி வருவாய், 2019 ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான காலத்தில் 4.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. இதற்கு முன்பு இது 9.6 சதவீதமாக இருந்தது. பொருளாதாரப் பிரச்சனைகளை தீர்க்க உங்கள் வழி என்ன?

;