politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி:- மேட்டுப்பாளையம் சம்பவத்தை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார்.
ச.சா - மக்கள் புகார் குடுத்தும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலைனு அவர் சொல்றதுல என்ன அரசியல்..?
 

பிரதமர் மோடி :- ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முதல்வர் பதவி விற்கப்படும்.
ச.சா - மத்திய அமைச்சர் பதவிய வெச்சு நீங்க பேரம் பேசுனீங்கன்னு சரத்பவார் போட்டு உடைச்சுட்டாரே..??
 

மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் :- 51 நிதி மோசடியாளர்கள் வெளிநாடுகளில் தலைமறைவு.
ச.சா - இதுவரைக்கும் ஒருத்தரக் கூட திரும்பக் கொண்டு வர முடியாதது உங்க சாதனையோ..??
 

மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல் ஹாசன் :- மழைக்காலத்தில் பெரும் சேதம் தவிர்க்க கவனம் தேவை.
ச.சா - மழைனால உண்டாகுற சேதத்தச் சொன்னாரா.. கட்சிக்கு ஏற்பட்டுருக்குற சேதத்த சொன்னாரா..??

;