politics

img

மோடி உள்ளிட்ட பாஜகவினரின் சவுகிதார் அடைமொழி பயன்பாட்டிற்கு 12 ஆயிரம் காவல் பணியாளர்கள் கடும் எதிர்ப்பு

பாட்னா, 

மோடி உள்ளிட்ட பாஜகவினரின் சவுகிதார் அடைமொழி பயன்பாட்டிற்கு 12 ஆயிரம் காவல் பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டார். மோடியின் தவறான பொருளாதார கொள்கை முடிவுகளால் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகினர். இதனால் நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலை உருவாகி உள்ளது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தனது அரசின் தோல்விகளை மறைக்க பிரதமர் மோடி சவுகிதார் என்ற அடைமொழியை தனது பெயருக்கு முன் சேர்த்துள்ளார். மோடியைத் தொடர்ந்து பாஜக தலைவர்கள் மற்றும் கட்சியினர் பலரும் தங்கள் பெருக்கு முன் சவுகிதார் என்ற பெயரை சேர்த்துள்ளனர். இதற்கு பஞ்சாப் காவல் பணியாளர்கள் கடும் எதிர்பப்பு தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் பஞ்சாப் மாநில தலைமை தேர்தல் அதிகாரி கருணாராஜூவிடம், அம்மாநிலத்தை சேர்ந்த 12 ஆயிரம் காவல் பணியாளர்கள் (சவுக்கிதார்கள்) ஒரு புகார் மனுவை கொடுத்தனர். பஞ்சாப் பென்டு காவல் பணியாளர்கள் சங்கம் சார்பில், தலைவர் சத்குரு சிங் மஜ்கி தலைமையில் சென்ற நிர்வாகிகள், தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தேர்தல் பிரசாரத்தில் எங்களின் பெயரை (சவுக்கிதார்) ஓட்டுக்காக பயன்படுத்துகின்றனர். இதை நாங்கள் ஏற்கவில்லை. கொள்ளை, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க இரவு முழுவதும் விழித்திருந்து காவல் காக்கும் எங்களை கொச்சைப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார். அதோடு, நாங்கள் 50 ரூபாய் சம்பளம் வாங்குகிறோம். ஆனால், அவர் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார். இனிமேல் பிரசாரத்தில் காவலாளி என்ற எங்களின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில், காவலாளி என தலைப்பிட்டு பல்வேறு விஷயங்களுடன் சம்பந்தப்படுத்தி பகிர்கின்றனர். பாஜக, எங்களை மிகவும் கொச்சைப்படுத்துவதாக கருதுகிறோம். ஆகவே எங்கள் தொழிலை மையமாக வைத்து பிரசாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது என அந்த புகாரில் தெரிவித்துள்ளனர்.


 இதுபற்றி தலைவர் சத்குரு சிங் மஜ்கி கூறுகையில், “பஞ்சாப்பில் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை 12 ஆயிரம் காவலாளிகள் வேலை பார்த்து வருகிறோம். எங்களுக்கு மாதத்திற்கு ரூ.1250 மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. சைக்கிளில் தடியுடன் சென்று இரவு காவலில் ஈடுபடுகிறோம். எங்களை கொச்சைப்படுத்தும் வகையில், ஓட்டுக்காக காவலாளி என பாஜவினர் பேசக்கூடாது என தேர்தல் அதிகாரியிடம் கூறியிருக்கிறோம். இனிமேல் பயன்படுத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தயாராகியுள்ளோம்’’ என்றார். 


;