politics

img

இன்று வாக்கு எண்ணிக்கை

எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு

புதுதில்லி, மே 22-விவிபேட் எந்திரத்துடன் இணைக் கப்பட்ட துண்டுச்சீட்டுகளின் எண்ணிக்கைக்கும், மின்னணு வாக்கு எந்திரங்களில் காட்டப்படும் எண்ணிக்கைக்கும் இடையே பொருத்தமின்றி இருந்தால், அத்தொகுதி முழுமைக்குமான விவிபேட் எந்திரங்களின் துண்டுச்சீட்டுகளையே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (புதன்கிழமை) நிராகரித்தது.செவ்வாய்கிழமையன்று 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து,மனு ஒன்று கொடுத்தனர். அதில் விவிபேட் எந்திரத்துடன் இணைக்கப்பட்ட துண்டுச்சீட்டுகளில் காட்டப்படும் எண்ணிக்கைக்கும், மின்னணு வாக்குஎந்திரங்களில் காட்டப்படும் எண் ணிக்கைக்கும் பொருத்தமற்று இருக்குமாயின் அத்தொகுதி முழுமைக்குமான விவிபேட் எந்திரங்களின்துண்டுச்சீட்டுகளை எண்ணி, அதன் அடிப்படையில் தேர்தல் முடிவினை அறிவித்திட வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.இதன்மீது முடிவெடுப்பதற்காக புதனன்று நடைபெற்ற தேர்தல் ஆணையர்களின் கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரிப்பதாக முடிவெடுத்துள்ளனர்.   (ந.நி.)

காலதாமதமின்றி, துல்லியமாக வெளியிட ஏற்பாடு: ஆணையர்

சென்னை, மே 22-வாக்கு எண்ணிக்கை முடிவுகளை காலதாமதமின்றி, துல்லியமாக வெளியிட ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறியுள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக் கான அனைத்து ஏற்பாடுகள் முடிந்துவிட்டன. ஒரு சுற்று வாக்குகள் 30 நிமிடங்களில் எண்ணப்படும் என்றும், அதன் முடிவுகள்eci.gov.in  அல்லது  elections.tn.gov.in இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார். ஓட்டர் ஹெல்ப்லைன் செயலியின் மூலமும் அறிந்து கொள்ள முடியும்” என்றார்.ஒவ்வொரு தொகுதிக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளதாகவும் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் ஒப்புதலுக்குப் பின்னரே தேர்தல் அதிகாரி முடிவை அறிவிப்பார் என்றும் சத்தியபிரத சாகு தெரிவித்தார்.வாக்கு எண்ணும் மையங் கள் அனைத்தும் கண்காணிப்புக் கேமரா மூலம் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என் றும், ஆயுதப் படை, துணை ராணுவம், போலீஸ் என 41 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதிகபட்சமாக திருவள்ளூர் தொகுதியில் 34 சுற்றுகளும், குறைந்தபட்சம் மத்திய சென்னையில் 19 சுற்றுகளும் எண்ணப்படஉள்ளதால், வாக்கு எண்ணிக்கை முழுவதும் முடிவடையும் காலநேரத்தை கணக்கிட முடியாது எனவும் அவர் கூறினார்.

‘செல்போன்’ எடுத்து செல்ல தடை

வாக்கு எண்ணும் மையங்களுக்குள் ஒரு வேட்பாளருக்கு 16 முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து முகவர்கள் ஒரு முறை 100 மீட்டர் வெளியே சென்றுவிட்டால், அவர்கள் மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார் கள். வாக்கு எண்ணும் மையங் களுக்குள் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு செல்லக் கூடாது. எனவே தான் ‘பேனா’ எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. பென்சில் வைத்துக் கொள்ளலாம். செல்போன் எடுத்து வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி, நுண் பார்வையாளர்கள் ஆகியோர் மட்டும் செல் போன் எடுத்துச் செல்ல தடை இல்லை. அதற்கு அவர்களுக்கு முறையான அனுமதி உண்டு.




;