politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: குடிநீர்த் தட்டுப்பாட்டை மிகைப்படுத்துகிறார்கள்.
ச.சா - மக்கள் அல்லாடுறது உங்க கண்ணுல படலையா..??
******
தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார்: அரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பன் இல்லை.
ச.சா - டிடிவி தினகரனோட பேச்சுவார்த்தை எதுவும் நடத்துறீங்களோ..??
******
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: தமிழை வைத்து அரசியல் செய்கிறார்கள்.
ச.சா - இந்தித் திணிப்புங்குற அரசியல விடவா..??
******
தமிழக அமைச்சர் செங்கோட்டையன்: தண்ணீர் தட்டுப்பாடு என்று விடுமுறை விட்டால் பள்ளிகள் மீது நடவடிக்கை.
ச.சா - தண்ணீர் தராத அரசாங்கத்து மேல என்ன நடவடிக்கை..??

;