politics

img

செய்யாத்துரை கூட்டாளியோடு அணிசேர்ந்த மோடி ஊழலைப் பற்றி பேசலாமா? திருப்போரூரில் மு.க.ஸ்டாலின் கேள்வி

மோடி தலைமையிலான மத்திய அரசின் ஊழலைப் பார்த்து நாடே சிரித்துக்கொண்டிருக்கிறது என்றும் செய்யாத்துரை கூட்டாளியோடு அணிசேர்ந்துவிட்டு ஊழலைப்பற்றி மோடி பேசலாமா என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வம், திருப்போரூர்சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எல்.செந்தில் ஆகியோரை ஆத ரித்து திருக்கழுக்குன்றத்தில் திங்களன்று மாலை (மார்ச் 25) நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:மத்தியில் ஆளக்கூடிய பாஜக ஆட்சியும், மாநிலத்தில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கக்கூடிய அ.தி.மு.க ஆட்சியும், மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. தமிழக மக்களின் துயரம் தொடர்கிறது.

அதைப்பற்றி மோடிக்கோ, எடப்பாடிக்கோ துளியும் கவலை இல்லை. அவர்கள் கவலை எல்லாம் பதவியில் இருந்தே தீர வேண்டும். அதை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற சுயநலம் ஒன்று தான் அந்த இரண்டுபேரின் ரத்தத்தில் ஓடிக்கொண்டி ருக்கின்றது. அந்த சுயநல சக்திகள் எல்லாம் இன்றைக்கு தேர்தலில் கூட்டணி சேர்ந்து இருக்கின்றன.தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரையில் அவர் தனக்காகவும், தன்னுடைய உறவினர்களுக்காகவும் ஆட்சியை நடத்துகின்றார், தன்னுடைய பினாமிகளுக்காக அவர் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றார். அவர் முதலமைச்சராக இருந்தா லும் அவருக்கு உட்பட்டு இருக்கக்கூடிய துறைகள் பல உண்டு, அந்தத்துறைகளில் ஒன்று தான் நெடுஞ்சாலைத்துறை. அந்த நெடுஞ் சாலைத் துறையின் மூலமாகஇன்றைக்கு பல ஊழல்கள்நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன.

டெண்டரில் சுமார் 3,500 கோடிரூபாய் ஊழல் நடந்து இருக் கின்றது. தன்னுடைய பினாமியாக இருக்கக்கூடிய செய்யாதுரைக்கு தொடர்ந்து எல்லா ஒப்பந்தங் களும் டெண்டர்களும் வழங்கப்படுகின்றது. அப்படிப்பட்ட செய்யா துரையின் வீட்டில் மோடிக்கு கட்டுப்பட்டு இருக்கக்கூடிய வருமான வரித்துறை ரெய்டு நடத்தி யது. அப்போது கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கிலோ கணக்கில் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. ஆனால் அதே செய்யாதுரையின் கூட்டாளி எடப்பாடியோடு இன்றைக்கு கூட்டணி சேர்ந்து இருப்பது பிரதமர் மோடிதான்.அதுமட்டுமல்ல, துணை முத லமைச்சராக இருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம், அவருக்கு மிக மிக வேண்டிய நண்பர் சேகர் ரெட்டி . அந்த சேகர் ரெட்டியின் அலுவலகத்தில், அவருடைய வீட்டில், அவர் நடத்திக் கொண்டி ருக்கக்கூடிய தொழிற்கூடங்களில், ரெய்டுகள் நடந்தது. தங்கக் கட்டி கள், கோடி கோடியாக பணம் கைப்பற்றப்பட்டது. அந்த ஓ.பி.எஸ்-சுடன்தான் பிரதமர் மோடி கூட்டு வைத்திருக்கிறார்.

குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கரை முதலமைச்சர் பாதுகாக்கிறார். அப்படிப்பட்ட முதலமைச்சருடன் மோடி கூட்டு வைத்துள்ளார். இப்படிப்பட்ட பிரதமர் ஊழலைப் பற்றி மோடி பேசலாமா ? நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் செய்ததில் பிரதமர் மோடியைப் பார்த்து நாடே சந்தி சிரித்துக் கொண்டிருக்கின்றது.உச்சநீதிமன்றம் எச்சரித்த பின்னர்தான் லோக்பால் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதுவும் மோடி ஆட்சியைவிட்டு விலகும் நேரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டுகாலமாக லோக்பால் அமைப்பிற்கு தலைவரை நியமிக்காமல் இருந்ததற்கு என்ன காரணம்? அப்படி நியமித்திருந்தால் மத்திய அரசின் ஊழல் வழக்கு ரோட்டிற்கு வந்து இருக்கும். சந்தைக்கு வந்திருக்கும்.மோடி ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு இந்தியா 50 ஆண்டு காலம் பின்னோக்கி போய்விட்டது, இன்னும் பதினைந்து ஆண்டு காலம் பின்னோக்கி போய்க் கொண்டிருக்கக்கூடிய நிலை. இதற்கெல்லாம் மக்களாகிய நீங்கள்தான்தண்டனை கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

;