politics

img

கேள்வி நேரத்திலிருந்து...

கைத்தறி பூங்கா: அரசு தயார்!

மதுரை மாவட்டத்தில் சவுராஸ்டிரா என்று அழைக் கப்படும் மக்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். இவர்க ளில் பெரும்பகுதியி னர் கைத்தறி நெசவுத் தொழில்  செய்து வருகிறார்கள். இவர்களது வாழ்வு நலிவடைந் துள்ளதால் திருப்பரங்குன்றம் தொகுதி நிலையூர் மற்றும் கைத்தறி நகரில் ஜவுளி பூங்கா ஒன்று அமைத்து  கொடுக்க அரசு முன்வருமா? என திமுக உறுப்பினர் மருத்துவர் பா.சரவணன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன்,“நிலையூர் பகுதியில் சுமார் 3 ஆயிரம்   நெசவாளர்கள் வசிக்கிறார்கள். இங்குள்ள 7 கூட்டுறவு சங்கங்களில் 400 பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ள னர். மற்றவர்கள் தனியார் துறையில் தொழில் செய்து  வருகிறார்கள். அந்த பகுதியில் ஜவுளி பூங்கா அமைத்  துக்கொடுக்க அரசு தயாராக உள்ளது. இதற்கு தேவை யான நிலம், மூலதனம் குறித்து பேசப்பட்டது. அனைத்து  கூட்டுறவு சங்கமும் லாபத்தில் இயங்கி வருவதால் தற்போதுள்ள வசதிகளே போதும் என்று கூறிவிட்டனர்” என்றார்.

ரூ.100 கோடி தேவை....

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சிவகிரி பகுதியில் தொழிற் பயிற்சி நிலையம்  அமைப்பதற்கான தேவையான நிலம், கட்டட வசதி கள் இருக்கிறது. புதிதாக துவங்கும் தொழிற் பயிற்சி  நிலையத்திற்கு தேவைப்படும் தளவாடப் பொருட் களை வாங்கி கொடுக்கவும் மக்கள் தயாராக உள்ளார்  கள். எனவே, வரும் நிதியாண்டிலேயே தொழிற் பயிற்சி  நிலையம் அமைக்க அரசு ஆவண செய்யுமா? என்று அதிமுக உறுப்பினர் வே.பொ. சிவசுப்பிரமணியன் வினவினார். இதற்கு பதில் அளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில்,“ தொழிற் பயிற்சி நிலை யத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க 100 கோடி  ரூபாய் தேவைப்படுகிறது. அந்த தொகை முழுவதையும்  பொதுமக்களிடம் வசூல் செய்து கொடுக்க முடியுமா? என்றார். அப்போது பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

 

;