politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக ஆளுநர் உரை :- ஒரு லட்சம் கல்லூரி இடைநிற்றல் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி.
ச.சா - பொதுத்தேர்வுனு வந்துருக்குறதுனால அஞ்சாம் வகுப்புலயே நிப்பாங்களே.. அதுக்கு என்ன பண்ணப் போறீங்க..??
 

பிரதமர் மோடி :- ஊழல் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.
ச.சா - அடிக்குற மாதிரி நடிக்குறீங்கன்னு எல்லாருக்கும்தான் தெரியுமே..??
 

செய்தி :- உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பு என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.
ச.சா - வேலைவாய்ப்பு எதுவும் கிடைச்சதா தெரியலையே..??
 

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் :- பொருளாதார விவகாரம் குறித்து அவதூறு பரப்புகிறார்கள்.
ச.சா - நீங்களாவது உண்மையச் சொல்லுங்களேன்..!!

;