politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக பள்ளிக்கல்வித்துறை :- தேவைக்கதிகமாக 12 ஆயிரம் ஆசிரியர்கள் இருப்பதால் விருப்ப ஓய்வுத்திட்டம்.
ச.சா - ஆசிரியர் பற்றாக்குறையால பல பள்ளிக்கூடங்கள் தவிக்குதே..??
 

தமிழக அமைச்சர் சீனிவாசன் :- தமிழக சினிமாவில்தான் வெற்றிடம் நிலவுகிறது.
ச.சா - ஏட்டிக்குப் போட்டியா பேசுறேன்னு கேலிக்கு உள்ளாகிறாதீங்க..!!
 

தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ :- திமுகவுடன் இருக்கும் சில கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில்  அதிமுக பக்கம் வரும்.
ச.சா - இடைத்தேர்தல் நேரத்துல உங்கள விட்டுதான் ஒரு கட்சி போச்சு... நீங்கதான் கவனமா இருக்கணும்..!!
 

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் :- மாணவர்களுக்கு வகுப்பறைக் கல்வி என்பது அவசியமானதுதான் என்றாலும், அனைத்தையும் கற்றுத் தராது.
ச.சா - உண்மைதான்.. ஆனா மூட நம்பிக்கைகள கற்றுத்தர்ற உங்க அமைப்புகள்கிட்ட என்ன அனுபவம் அவங்களுக்குக் கிடைக்கும்..??

;