politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் :- வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக் குறைப்பு.
ச.சா - இது தொழிலாளர்கள் வயித்துல அடிக்குற வேலையாச்சே..??
 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி :- உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்.
ச.சா - கல்வி காசு சம்பாதிக்குறதா மாறியிருக்குறதுலயும் நாமதான முதலிடம்..??
 

நடிகர் ரஜினிகாந்த் :- எனக்கு ஒரு ஏமாற்றம். அதை இப்போது சொல்ல மாட்டேன்.
ச.சா - மக்களுக்கும் ஒரே ஒரு ஏமாற்றம்தான்.. எப்பவுமே தெளிவா பேசமாட்டேங்குறீங்கன்னு..!!
 

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்:- சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காவல்துறை யினர் சரியாக நடந்து கொள்ள வேண்டும்.
ச.சா - பாஜக குண்டர்கள் தாக்குறப்போ வேடிக்கை பாக்குறாங்களே... அப்படியா..??