politics

img

கர்நாடக அரசியலில் பரபரப்பு : 10 பாஜக எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இணைகிறார்கள்? 

பெங்களூரு 
உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நேர கட்சித் தாவல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் தேர்தல் சம்பந்தம் இல்லாத கர்நாடக மாநிலத்தில் திடீரென அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அதாவது 10-க்கும் மேற்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இணைய தயாராக இருப்பதாக கர்நாடக எதிர்கட்சித் தலைவர் சித்தராமையாவும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாரும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தி பொய் எனவும் நாங்கள் யாரும் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர மாட்டோம் என காங்கிரஸிருந்து பாஜகவில் இணைந்த எம்எல்ஏக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

வெளிப்படையாக வரவேற்பு அறிக்கை வெளியிட்ட சித்தராமையா
காங்கிரஸில் சேர விரும்பும் மற்ற கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் கட்சியின் தலைமை மற்றும் சித்தாந்தத்தை ஏற்க வேண்டும். ஒப்புக்கொண்டால், நாங்கள் அவர்களை வரவேற்போம். அவர்கள் பெயர்களை தற்போதைக்கு வெளியிடப் போவதில்லை என எதிர்கட்சித் தலைவர்  சித்தராமையா வரவேற்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.இந்த அறிக்கை தான் கர்நாடக அரசியலில் தற்போது வரை பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி வருகிறது.

;