politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி :- 
அரசியலில் மதத்தைக் கலக்கிறது பாஜக.
ச.சா - இது தெரிஞ்சுதான அவங்களுக்கு ரத்தினக் கம்பளம் விரிச்சீங்க..!?
_ _ _
 செய்தி :- ஸ்விஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்புப்பணம் மீதான பிடி இறுகுகிறது.
ச.சா - அந்தப்பிடி அம்பானியோடதா, அதானியோடதா..??
_ _ _
ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் :- மத்திய அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். ஆக்கப்பூர்வ ஆலோசனை வழங்கும்.
ச.சா -  தென்னிந்தியாவுல இந்தியத் திணிக்கச் சொன்னது நீங்கதானா..??
_ _ _
செய்தி :- பீகார் அமைச்சரவை விரிவாக்கத்தில் பாஜகவுக்கு இடம் இல்லை.
ச.சா - இதுதான் இவங்க கூட்டணி லட்சணம்.. மக்களப் பத்தி கவலைப்படல.!!

;