politics

img

மம்தாவின் கொள்கை மோசமானது...  திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகிய முக்கியத் தலைவர் மம்லேதர் குற்றச்சாட்டு...

பனாஜி 
விரைவில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள கோவா மாநிலத்தின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக என மும்முனை போட்டி இருந்த நிலையில், தேசிய அரசியல் கனவில் ஊறிப்போயிருக்கும் மம்தா மாற்று கட்சி தலைவர்களை இழுத்து அங்கு 4 முனைப்போட்டியை உருவாக்கியுள்ளார்.

இவ்வாறு இழுக்கப்பட்ட மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் எம்எல்ஏ லாவூ  மம்லேதர், மம்தாவின் கொள்கை பாஜகவை விட மோசமானது எனக் கூறி திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகியுள்ளார்.திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகும் பொழுது மம்தாவை கடுமையாக சாடியுள்ள மம்லேதர்,"திரிணாமுல் மிகவும் மதச்சார்பற்ற கட்சி என்ற எண்ணத்தில் அக்கட்சியில் இணைந்தேன். அது பாஜகவை விட மோசமானது. கோவா மக்களை மதத்தின் அடிப்படையில் பிரிக்க முயற்சித்ததை ஆழ்ந்த வருத்தத்துடன் கொண்டு வர விரும்புகிறோம். இயற்கையில் முற்றிலும் வகுப்புவாதமானது. பொய்யான வாக்குறுதிகளுடன், வகுப்புவாத அரசியலில் விளையாடி வருகிறார் மம்தா. கோவாக்களை பிரிக்க முயற்சிக்கும் ஒரு கட்சியுடன் தொடர விரும்பவில்லை. கோவாவில் பிரச்சாரத்திற்காக நீங்கள் அமர்த்தியுள்ள நிறுவனம் (ஐ பேக்) கோவா மக்களை முட்டாளாக்குகிறது, அவர்கள் கோவாவின் துடிப்பை புரிந்து கொள்ளவில்லை" என குற்றச்சாட்டியுள்ளார்.

போண்டா தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த மம்லேதர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கோவாவில் மம்தா கட்சிக்கு தனி செல்வாக்கு எதுவும் கிடையாது. மம்லேதர் ஒருவர் மட்டுமே முக்கியத்தலைவராக உள்ளார் எனக் கூறப்படுகிறது.தேசிய அரசியல் கனவில் இருக்கும் மம்தாவிற்கு இது மிகப்பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.

;