politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூரிலும், பீகாரிலும், பாட்னாவிலும் விவசாயிகளின் எழுச்சிமிகு இயக்கங்கள் நடந்துள்ளன. தஞ்சாவூரில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடந்திருக்கிறது. பாட்னாவில் விவசாயிகளின் போராட்டத்தில் காவல்துறை தடியடிநடத்தி ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது. நாட்டின் அன்னதாதாக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி, நமதுஅன்னதாதாக்களின் குரலுக்கு கட்டாயம் மரியாதை அளிக்க வேண்டும். 

                                                    *********************

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் வியாழனன்று கூடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நமது தேசத்தின் தலைநகர் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரும் போராட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது. 35நாட்கள், 32 உயிர்கள். இந்தப் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் கேரள தீர்மானம் அமைந்துள்ளது.  எப்போதுமே இந்திய நாட்டிற்கு கேரளா வழிகாட்டுகிறது. இப்போதும் வழிகாட்டியிருக்கிறது.

                                                    *********************

அனில் அம்பானியின் மூன்று பெரும் நிறுவனங்கள், விஜய் மல்லையா வாங்கிய கடனை விட பத்து மடங்கு அதிகமான கடன்வாங்கிஏமாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. கோடானுகோடி இந்தியர்களின் சேமிப்புப் பணம் இப்படி மோடி அரசின் சில குறிப்பிட்ட கூட்டுக்களவாணிகளுக்கு திருப்பிவிடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இன்றைக்கு நடந்துகொண்டிருக்கும் மிக மிக மோசமான கூட்டுக்களவாணிகளின் ராஜ்ஜியத்திற்கு இதுஒரு எடுத்துக்காட்டு ஆகும். பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழை-எளிய மக்களுக்கு எந்தவிதமான உதவியும் கிடைக்கவில்லை; ஆனால் இந்த கூட்டுக்களவாணிகள் விதவிதமாக கொள்ளையடித்திருக்கிறார்கள். தேசத்தின் சொத்துக்களையெல்லாம், செல்வங்களையெல்லாம் கூட்டுக்களவாணிகளுக்கு வாரி வழங்கிவிட்டு உணவு உற்பத்தி செய்யும் அன்னதாதாக்களின் வாழ்வை நசுக்குகிறது பாஜக அரசு. இவர்களது ராஜ்ஜியத்தில் இந்தியா உணவுப்பாதுகாப்பின்மையை நோக்கி பயணிக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி அதலபாதாளத்தில் வீழ்த்திதள்ளப்படுகிறது. இத்தகைய பேரழிவை இந்த நாட்டிற்கு உருவாக்கியிருக்கும் பாஜக அரசாங்கத்தை மக்கள் போராட்டம் நிச்சயம் பணியச்செய்யும்.

                                                                                  +++++++++++++++++++

தோழர் சீத்தாராம் யெச்சூரி  அவர்களின் கூடுதல் கருத்துக்களை காண கீழ் காணும் லிங்க்-கை கிளிக் செய்யவும்....

முகநூல் : https://www.facebook.com/ComradeSRY/

டுவிட்டர் : https://twitter.com/SitaramYechury

;