politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

மத்திய தொலைத்தொடர்புத்துறை :- 92 ஆயிரம் கோடி ரூபாய் உரிமத்தொகை பாக்கியை நிறுவனங்கள் வைத்துள்ளன.
ச.சா : இதுல பொதுத்துறை பி.எஸ்.என்.எல். வெறும் 2 ஆயிரம் கோடிதான்.. மத்ததெல்லாம் தனியார் பெரு நிறுவனங்களாம்...!!
 

செய்தி :- சீன-அமெரிக்க வர்த்தகப் பிரச்சனையால் சர்வதேசச் சந்தையில் கடும் பாதிப்பு.
ச.சா - அங்க ஏற்படுற இழப்ப சரிக்கட்டதான் இந்தியா மேல அமெரிக்காவோட அழுத்தம் அதிகரிக்குதோ..??

மத்திய அமைச்சர் அமித் ஷா :- சட்டம் ஒழுங்கு மோசமாக இருந்தால் மாநிலத்தில் வளர்ச்சி ஏற்படாது.
ச.சா - உத்தரப்பிரதேசத்தச் சொல்றாரோ..??
 

பிரதமர் மோடி :- சந்திரயான் விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்சனையை விஞ்ஞானிகள் சரிசெய்தது பாராட்டத்தக்கது.
ச.சா - நல்லவேளை... அதுக்கு நான்தான் ஆலோசனை கொடுத்தேன்னு சொல்லாம விட்டாரே..!!

;